கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 7

செங்கோடுவேரி: செங்கோடுவேரியைச் சிறுசெடி என்கிறார் இரா. பஞ்சவர்ணம் (கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், ப. 82). சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர மற்ற சங்கப் பாடல்களில் இத்தாவரம்பற்றிய குறிப்பு காணப்படவில்லை.  ஆனால், கோவை இளஞ்சேரன் இதனை ஒரு மரம் என்கிறார். செம்மைநிறப் பூ உடையது. கொங்குவேளிரும் (பெருங்கதை) இதனை முல்லைநிலத்து ஆற்றங்கரை மரமெனக் கருதுகிறார்.  (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப.100). தேமாம்பூ தேமாம்பூ, ஆம்பிரம், மாம்பூ என அழைக்கப்படும். முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது; முதலில் புளிப்பாகவும், […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 6

வெட்சி சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேன்கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம். மரங்களின் தீப்பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும். பெருவாரியான மக்களால் இட்லிப்பூ எனவும் அழைக்கப்படும். குல்லை, கெச்சை, சேதாரம் போன்ற பல பெயர்களால் இப்பூ அறியப்படுகிறது. உலகெங்கிலுமுள்ள அயனமண்டலம், உப அயனமண்டல நாடுகளில் தோன்றினாலும் அயனமண்டல ஆசியா, குறிப்பாக இந்தியாவில் இதன் பல்வகைகள் செறிந்து காணப்படுகின்றன. இப்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் 3 முதல் 6  அங்குலம் நீளமுள்ள […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 5

குறிஞ்சி கடல் மட்டத்திற்கு ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும். பிறசெடிகளுக்கு அத்தகைய வரையறை இச்செடிக்கிருப்பதுபோல்  கிடையாது. ஆறாயிரம் அடிக்கு மேற்பட்ட நிலம், மலையும் மலைசார்ந்த பகுதியாகத்தான் இருக்கும். இத்தன்மையின் அடிப்படைக் காரணத்தாலேயே, மலையையும் மலை சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும். இச்செடி ஒன்பது ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைச்சாரலில் கூட்டங்கூட்டமாகப் பூக்கும். இயற்கையில் இத்தகைய வியப்பிற்குரிய […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 4

2.  ஆம்பல் அல்லி அல்லது ஆம்பல்  நீரில்  வளரும்  ஒரு  கொடியும், அதில்  பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் மிகுதியாக மலர்ந்திருக்கும். கொடியில் முள்போன்ற அமைப்பு இருக்கும். அதனை, ‘அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல்’ என்று வழங்கினர் (அகநானூறு, 96: 4-5). கார்காலத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்திருக்கும்போது இது மிகுதியாக மலரும். அதனால்‘மாரி ஆம்பல்’ என்று குறித்தனர் (குறுந்தொகை, 117 :1). இது காலையில் நெய்தல் மலர்களுடன் மலர்ந்திருக்கும். […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 3

பூக்களைக் குறிக்கும் பாடல் அடிகள் “ …….. ……… ………. ….. வள் இதழ்ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங் கோடுவேரி, தேமா, மணிச்சிகை,உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,வடவனம், வாகை, வான் பூங் குடசம்.எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,பயினி, வானி, பல் இணர்க் குரவம்,பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,போங்கம், திலகம், […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2

2.  கபிலர்  கபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய  ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் கூறும். இவர் அந்தணக் குலத்தவர் . “யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்”, “யானே தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே” (புறநானூறு, 200-201) என இவர் தம்மைக் கூறிக்கொள்வதாலும், “புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்” (மேலது, 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 1

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம் பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் சங்கப் பலகையில் வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்களாகிய நக்கீரர் முதலிய எண்மரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,  குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டாகும்.        “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை         பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய         கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்         பாலை கடாத்தொடும் பத்து” என்பதனால் இப்பெயர்களும் இவற்றின் முறையும் விளங்கும். இவை,“ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற்தெரிந்து, சான்றோர் உரைத்த தண்தமிழ்த் […]

சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் ‘சல்லி கட்டு’

சென்னை: மிருகவதை என்ற ஒற்றை சொல்லுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு. இந்த சல்லிக்கட்டு என்கிற ஜல்லிக்கட்டை ஒழித்துவிடுவதன் மூலம் தமிழர் பண்பாட்டின் முதன்மை அடையாளம் அழிக்கப்பட்டுவிடும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ‘மிருக ஆதரவாளர்கள்’. மலைபடுகடாம்: இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறுமலைத்தலை வந்த மரையான் கதழ்விடைமாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்பவள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை (மலை.330-335) ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்திருமாமெய் […]

அரிட்டாபட்டி மலைகள்

மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது. மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே… இந்த சிறு பாறை இங்கு எவ்வாறு வந்திருக்கும் ? என்ற கேள்வி மனதில் எழும் பொழுது புவியின் மாற்றங்களை பற்றி அறிய முடிகிறது. பூகோல மாயங்கள் எல்லாம் கண் முன்னே நிற்கின்றன… எவ்வித சாயங்கள் ஏதுமின்றி.  எது வாழ்வில் நிச்சயம் ? என்ற கேள்விக்கு இந்த சிறிய பாறைகள் நிற்கும் தொனி எனக்குள் […]

திருவாதவூர் ஓவா மலை…

திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப்  பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய  இருவரும் பிறந்த ஊர். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால்  அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில்  இம்மலை உள்ளது.