கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17
நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84). கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் […]