தஞ்சாவூர் மேல வீதி : அரிய புகைப்படங்கள்
தஞ்சாவூர் மேல வீதி அரிய புகைப்படங்கள் தஞ்சாவூர் புகைப்படங்கள்
தஞ்சாவூர் மேல வீதி அரிய புகைப்படங்கள் தஞ்சாவூர் புகைப்படங்கள்
யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்? சோழர் காலம்தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்க காலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. […]
பிரான்சில் நடந்து முடிந்த நகரமன்ற தேர்தலில் பிரான்சு வாழ் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் போட்டியிட்டுள்ளனர். பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகரமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. உலகப் பெருந்தொற்றான கோவிட் 19 (கொரோனா) நேரத்திலும் தொடர்ந்து இரண்டாம் சுற்றுக்கான தேர்தல் ஜூன் மாதம் 28 ஆம் தேதி நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் பல தமிழர்கள் வேட்பாளர்களாக நகரமன்ற பதவிகளில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். […]
வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை. முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவது போல பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது. தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி திரைகளின் பொய்ப் பிம்பங்களில் அலுப்புற்றிருந்த விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின. இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக் கூட ஊரடங்கோ என சந்தேகிக்கக்கூடிய அமைதி. மனிதர் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட […]
லியொனார்டோ டாவின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட “மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா…ஓஹோ…இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை. இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது, மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார், மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் […]
ஐரோப்பிய நாடான பிரான்சில் வருகின்ற மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதன் அனைத்து மாநிலங்களிலும் நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றுபெறுபவர்கள் மேயர் (நகரத்தந்தை) மற்றும் கோன்சியே முனிசிபல் (Conseiller municipal) உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். பிரான்சின் இல் தே பிரான்ஸ் (IL de France) மாநிலத்தில் 95 மாவட்டங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மை மாவட்டங்களில் பிரான்சு வாழ் தமிழர்கள் பலர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக செய்ன் சான் தெனி (Seine saint […]
பிரான்சு தலைநகர் பாரீசில் தொடர்ந்து உயர்ந்துவரும் கொரோனா நோய்தொற்றினால் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தி பரவியதால் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில், தமிழ் கடைகளில் மக்கள் குழுமி வருகின்றனர். பிரான்சில் தற்போது வரை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5423 என பிரான்சின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (06/03/2020) முதல் பள்ளிகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி […]
ஜனவரி 24 ஆம் தேதி ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் நோயாளர் பதிவுகளை உறுதிப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும். ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி மாத தொடக்கத்திலும் மொத்தம் 12 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். தற்போது அவர்களனைவரும் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 81 வயதான சீன சுற்றுலா பயணியான 12 வது நபர் உயிரிழந்தார். புதிய நோயாளர் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாமல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் […]
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும்உளமதில் உள்ள குறை யகலும்வலம் வந்து வண்டமிழ் மொழிபேசிகுலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!வறுமையை வாளெடுத்து வீழ்த்தி விடுநன்னீராம் காவேரித்தாயை வாழ்த்திபாடு! சிறப்பு சிந்தை சிறகு விரித்துசிறந்து வருக! சித்திரை மகளே! விரும்பிய தெல்லாம் அரும்பும் ஆண்டு‘விளம்பி’யது கைக் கூடும் நீ! வேண்டு!இனியவராய் மாந்தர் மங்காத மகிழ்வோடு இன்புறவே இனிக்கட்டும் இவ்வாண்டு! -புதுவை இரா.வேலு
பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் பிடித்து முந்திவந்து நிற்பவனின் யாசிப்பு அது. எந்த நெருக்கடியையும் சின்னச் சலுகையான நிலைப்பாட்டின் மூலம் தப்பித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின்றி வேறல்ல. அதாவது 100 […]