எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ்எழுத்துகள் பொறித்த ஓடுகள்

எகிப்தில் கேசிர் அல்கதிம் (லெக்கோசுலிமன்) என்ற இடத்தில் கி.மு.1-ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. முப்பதாண்டுகளுக்கு முன்னரும்  இரண்டு ஓடுகள் இதே இடத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன்  கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில செய்தித்தளம். தமிழர் வரலாறு தொல்பொருள்

கல்லணை : தமிழனின் வியக்கதகு அறிவாற்றல்

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரண விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒருவழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே வென்று மணல் […]

சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் வீரர்கள் சூடிய மலர்கள்

போர்முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள். வெட்சிபூ : நிறைகவர்தலின் போது சூடும்பூ. அதாவது சங்ககாலத்தில் எதிரிநாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.  கரந்தை பூ : அப்படி எதிரிநாட்டவர் வந்து கவர்ந்து செல்லமுயலும் போது அதை தடுக்க வரும் வீரர்கள் அணிந்திருக்கும் பூவின்பெயர் எதிரிநாட்டுபடையை […]

அரிக்கமேடு : வரலாறு மறைத்த புதுவையின் சிறப்பு

பெயரைப்படித்தால் மிகச்சாதாரணமாக தோன்றும். ஆனால், எத்தனை நாடுகளுக்கு போனாலும் கிடைக்காத பெருமை ,பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று புதையல் தமிழகத்தின் கிழக்குக்கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பலவணிகத்தளங்கள் இருந்தன . அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு காவிரிப் பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ்சேர்க்கும் முகவரிப்பகுதியாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் அரிக்கமேடு என்னுமிடம், தென்இந்தியாவின் பாண்டிச்சேரியூனியன் பிரதேசத்தின அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். சோழர் காலத்தில் அரிக்கமேடு […]

ஊர்களின் தூய தமிழ் பெயர்கள்

மறைக்காடு – வேதாரண்யம்  நாவலம்பொழில் – ஜம்புதீவு  புளியங்காடு – திண்டிவனம்  கீரிமலை – நகுலேஸ்வரம்  குரங்காடுதுறை – பித்தலம்  பழமலை, திருமுதுகுன்றம் – விருத்தாசலம்  திருநெய்ததானம் – தில்லை ஸ்தானம்  திருவுச்சி – சிவகிரி  மாதொருபாகன் – அர்த்தநாரீஸ்வரர்  புள்ளிருக்குவேளுர் – வைத்தீசுவரன் கோயில்  திருநாணா – பவானி  திருநல்லம் – கோனேரிராசபுரம்  தில்லை – சிதம்பரம்  மயிலாடுதுறை – மாயூரம், மாயவரம்  திருப்பருப்பதம் – சிறீசைலம்  திருவ‌ர‌ங்கம் – ‍‍ஸ்ரீர‌ங்க‌ம்  திருப்பெரும்புதூர் – ஸ்ரீபெரும் […]

கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாறு : பூம்புகார்

காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கடியில் கண்மூடிக் கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் கலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத் தந்த நம் தமிழ் இனம்,இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம்,மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை […]

சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் 1876 -78 பற்றி தெரியுமா?

கிட்டத்தட்ட 35 – 40 இலட்சம் மக்களின் உயிர் குடித்த, 1876 – 78 வரை தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது எடுத்த அரிய புகைப்படம் .மேலும் தரவுகள் விரைவில் தமிழர் வரலாறு புகைப்படங்கள்

உலக சர்வாதிகாரி இட்லரையே அடிபணிய வைத்த தமிழன் …

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத ஒன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பாரற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான இட்லரையே மன்னிப்பு கோரச் செய்தவன் அடி பணிய வைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?  ஆம் தோழர்களே! அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான […]