லெயோன் புருஷாந்தி (LEON PROUCHANDY)

லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் “பிரவே” வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர். பெரும் செல்வ வளம் பெற்றிருந்த லெயோன் புருஷாந்தி அவர்கள் சைக்கோனில்(வியட்நாம்) வாழ்ந்த தமிழர்களால் […]

புறநானூற்றில் ஆட்சியியல்

புறநானூற்றில் ஆட்சியியல் முனைவர் கு. கணேசன், சாகித்திய அகாதெமி எழுத்தாளர், சேலம் உலகில் ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ் மக்களின் வாழ்வியலை வகுத்துக்காட்டும் கருவூலமாக தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே சங்க இலக்கியங்கள். சங்க நூல்கள் மூன்று காலங்களையும் முகிழ்க்கும் பெட்டகம். அவை தமிழர்தம் பண்பாட்டுக் கூறுகளை வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவை. இது வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட நூலாகும். சங்க காலத்தின் குறைபாடுகளைக் களைந்து வெளிக் கொணர்ந்தவை திருக்குறள். அன்றைய காலத்தின் […]

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்      முனைவர் அ.சு.இளங்கோவன் ஒட்டன்சத்திரம்.                            தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பகுப்புக்கும் முன்னதாகும். அகம், அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது. புறநானூறு தமிழர் பண்பாட்டின் களஞ்சியம். கி.பி. 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொற்காலம். ஆங்கில வாழ்வியலும் இலக்கியமும் உச்சி எய்தி உலகை வளைக்க வாய்ப்பளித்தன. ஆனால் […]

பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்

{தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் வீ. செல்வகுமார் தமிழகமெங்கிலும் விரிவான பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னணி ஆய்வாளர். தமிழ்ப்பல்கலை வளாகத்திலேயே கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தவர். கேரளத்தின் கடற்கரையில் அமைந்துள்ள பட்டிணம்தான் பண்டைய சங்க காலத் துறைமுகமான முசிரி என்பதை நிறுவிய ஆய்வுக் குழுவில் இவரும் ஒருவர். நமது வேண்டுகோளை ஏற்று வரலாறு டாட் காம் நூறாவது இதழுக்காக தனது பட்டிணம் ஆய்வின் ஒட்டுமொத்தப் பிழிவையும் ஒரே கட்டுரையில் அளித்திருக்கும் […]

சிங்கையில் தமிழ் மொழி

தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களே. அதுமட்டுமின்றி தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பும் சிங்கப்பூரில் உண்டு. இது நமக்கு கிடைத்துள்ள மிக பெருமையான விஷயமாகும். தமிழ் வானொலியான ஒலி 96.8, தமிழ் நாளிதழான தமிழ் முரசு மற்றும் தமிழ் ஒளிவழியான வசந்தம் ஆகியவை சிங்கப்பூரில் உள்ள முக்கியமான ஊடகங்களாகும். தமிழ் சிங்கப்பூரில் நிலைத்து இருப்பதற்கு இவை மிகவும் துணை நிற்கின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முறைகளும் சிங்கப்பூரில் பல பரிமாணங்களைக் […]

அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன.  இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  தமிழ்நாடு அரசு தொல்பொருள் […]

THE GENEALOGY OF THE JAPANESE LANGUAGE

Introduction In search of languages genetically related to Japanese, linguists over the last one hundred years have compared Japanese with almost every other language in the world-not only those of neighbouring peoples such as Ainu, Korean and Indonesian, but even Greek; yet none of these efforts have succeeded in establishing any kind of kinship. It […]

THE ASTONISHING LINKS BETWEEN TAMIL AND JAPANESE

In 1981, Professor Susumu Ono of Gakushuin University gained recognition for his provocative hypothesis for an ancient link between the Japanese and Tamil languages. Born in 1919, Ono graduated from the University of Tokyo in 1943. Recognized as one of the foremost linguists in Japan, Ono was Professor of Linguistics at Gakushuin University in Tokyo. […]

இந்தோனேசியாவில் தமிழர்கள் – தமிழர் வாழும் நாடுகள்

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்சீனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய […]