பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை…

12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது. கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது. நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம். கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது. இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு என்ற பெயரில் ஊர் உள்ளது. சிறுபாணாற்றுப்படையைப் பாடிய புலவர் பெருமகனார் நத்தத்தனார் பிறந்த நல்லூர், இங்குதான் உள்ளது. புதுச்சேரி – சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள கடப்பாக்கத்திலிருந்து பிரிந்து […]

அரிட்டாபட்டி மலைகள்

மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது. மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே… இந்த சிறு பாறை இங்கு எவ்வாறு வந்திருக்கும் ? என்ற கேள்வி மனதில் எழும் பொழுது புவியின் மாற்றங்களை பற்றி அறிய முடிகிறது. பூகோல மாயங்கள் எல்லாம் கண் முன்னே நிற்கின்றன… எவ்வித சாயங்கள் ஏதுமின்றி.  எது வாழ்வில் நிச்சயம் ? என்ற கேள்விக்கு இந்த சிறிய பாறைகள் நிற்கும் தொனி எனக்குள் […]

விசயநகர பேரரசும் – திருப்பதி கோயிலும் : சில உண்மைகள்

திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல்கதை பற்றியது இந்த பதிவு . அந்தகாதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே மாற்றியிருக்கும். விஜயநகரபேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 – 1485 வரை சங்கமவம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 – 1646 வரை அரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் […]

களப்பிரர் – தமிழகத்தின் முதல் குடியாட்சி

களப்பிரர் காலம் தமிழ்வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 – 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப்பட்ட காலம் கி.மு. 1 – முதல் கி.பி. 5 – ஆம் நூற்றாண்டு வரையே. ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்டகாலம், […]

திருப்பதி கோயிலும், சில உண்மைகளும். பாகம் : 2

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்தமதவிகாரம் (புத்த கோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்துமத பின்னணி புராண இதிகாச சான்றுகளை அதில் உள்ள கதைகளை பார்த்தோம். புத்தர் கோயில் என்று சொன்னாயே அது பற்றி போன பகுதிகளில் ஒன்றுமே நிறுவப்படவில்லையே என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்வது சற்று பொறுமையாக இருங்கள், அது புத்தர் கோயில் என்பது இந்தபகுதியிலும் நான் நிறுவ வரவில்லை, கடைசி இரண்டு பகுதிகளில் தான் அது பற்றி சொல்லப்போகிறோம். […]

பிரான்சு நகரமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர்கள் !

பிரான்சில் நடந்து முடிந்த நகரமன்ற தேர்தலில் பிரான்சு வாழ் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் போட்டியிட்டுள்ளனர். பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகரமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. உலகப் பெருந்தொற்றான கோவிட் 19 (கொரோனா) நேரத்திலும் தொடர்ந்து இரண்டாம் சுற்றுக்கான தேர்தல் ஜூன் மாதம் 28 ஆம் தேதி நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் பல தமிழர்கள் வேட்பாளர்களாக நகரமன்ற பதவிகளில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். […]

கொரோனா பூனை !

வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை. முடங்கிக் கிடந்த உடல் கைகளை அகல விரித்தும், துள்ளுவது போல பாவனை செய்தும், சிறு முறுவலுடன் விடுதலைக் கணத்தை ருசித்தது. தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி திரைகளின் பொய்ப் பிம்பங்களில் அலுப்புற்றிருந்த விழிகள் ஆர்வத்துடன் அலைபாயத் தொடங்கின. இயல்பான இருத்தலில் பூமி. ஓசைக்குக் கூட ஊரடங்கோ என சந்தேகிக்கக்கூடிய அமைதி. மனிதர் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட […]

மோனாலிசா vs தமிழ் பாறை ஓவியம் !

லியொனார்டோ டாவின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட “மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா…ஓஹோ…இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை. இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது, மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார், மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் […]