சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என்பது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஒரு பயணம்! வயற்காடுகள், ஆற்றங்கரைகள், இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அவ்வளவாகப் படாத கிராமங்கள் என்று சோழநாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் விளைவாகக் கண்டுபிடித்தவைதான் 65 புத்தர் சிலைகள்.எதிர்கொண்ட இனிய அனுபவங்கள் மட்டுமல்ல, எத்தனையோ தோல்விகளும் ஏமாற்றங்களும் […]

தமிழி எழுத்துப் பானை Ancient Tamil script

இந்தப் பானையில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் – தமிழி எழுத்துக்கள் – பானை கிடைத்த இடம் மருங்கூர்மருங்கூர் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகம்.  அத்தியகான் என்று தெளிவாகப் படிக்கும்படியாக உள்ளது. அத்தி, மத்திசங்க கால மன்னர்களின் பெயர்கள் அதியன் என்னும் பெயர் அதிகன் எனவும் குறிக்கப்பட்டுள்ளது வாணிகன் – என்னும் பெயரில் – கன் – உள்ளது. இந்தக் [கன்] [கான்] ஆனதற்கான விளக்கம் தெரியவில்லை ஒற்று எழுதப்பட்டுள்ள முறையினை எண்ணும்போது இது பல்லவர் காலத்தோடு தொடர்புடையது ஆகலாம் அல்லது சற்றே முந்தையது ஆகலாம். […]

சோழர் படை

சோழர் படை  என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். படை : கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே […]

வரிச்சியூர் – குன்னத்தூர் மலை – எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு – வே.சிவரஞ்சனி

இயற்கை வாழிடம்! இறைவன் பூமி!! தொல்லியல் தேடல்கள்!!! வரிச்சியூர் – குன்னத்தூர் மலை!!!! எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!! வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மதுரை மாவட்டம் வரிச்சியூர் குன்னத்தூர் மலையில் மொத்தம் 4 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவை:1. உதயகிரீசுவரர் குடைவரை2. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் உலகநாதீசுவரர் கோயில்3. அஸ்தகிரீசுவரர் குடைவரை4. நீலகண்டீசுவரர் குடைவரைஇதில் நீலகண்டீசுவரர் குடைவரை தவிர மற்ற 3 சின்னங்களும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் […]

நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005

1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின் போது மங்கலம், அய்யம்பேட்டை, புதூர், கோபிநாதப்பெருமாள் கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டனம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம்  ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய பதிவுகளில் திருநாட்டியத்தான்குடி வரையிலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றிய நாளிதழ் செய்திகளைக் கண்டோம். இப்பதிவில் உள்ளிக்கோட்டையில் திரு மாதவகுமாரசுவாமி அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வெளியான […]

களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்

வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை “இறவாப்புகழுடன்” விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம். மனிதனின் சமயப்பற்றினை வெளிக்காட்டும் ஆதார சான்றாக எழுப்பப்பட்டதே “கோயில்” எனலாம். காலத்தால் முந்தைய பல குடவரைக் கோயில்களையும், எண்ணிலா வரலாற்றுக் கல்வெட்டுகளையும் தன்னகத்தே கொண்டது பாண்டியநாடு. பாண்டியநாட்டின் வரலாற்றிச் சின்னங்களுள் ஆண்டிச்சிப்பாறை குடைவரைக் கோயிலுக்கும் இடம் உண்டு. அறியப்படாத பழைமையான நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்று. குகைக்கோயிலின் அமைவிடம்: தென்பாண்டி நாட்டின் […]

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் என இம் முப்பது இடங்களில் காணப்படுகின்றன. ஆனைமலை கல்வெட்டில் ‘அரட்ட’ என்ற சொல்லில் ‘ ட்’ என்ற மெய எழுத்துக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரச்சலூர்க் கல்வெட்டில் எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் எகரக் குறிலுக்கு புள்ளி […]

ஓசூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரியவகை நடுகற்கள்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், வெங்கடாசலபதி, மஞ்சுநாத்குமார் ஆகியோர் ஓசூர் அருகே பேரிகையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேரிகை பஸ் நிலையத்திற்கு எதிரே குப்பைமேட்டில், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அரிய வகை நடுகற்கள் எந்த பாதுகாப்புமின்றி குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது:- ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் சமூக வரலாற்றையும், அவர்களின் […]

14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு!

சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார் செல்லும் வழியில், 15வது கி.மீ., யில் உள்ளது பேரிகை கிராமம். இங்குள்ள ஏரியில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பேரிகை ஏரியின் கிழக்கு கரைப் பகுதியில், நான்கு அடி உயரம், […]

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான கோனமுட்டான் கொல்லை என்ற மாந்தோப்பில் 500 ஆண்டு பழமையான அரிய வகை நடுகற்களை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஷ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்களான பாலாஜி, மஞ்சுநாத், கார்த்திக், செல்வமணி மற்றும் திம்மராஜ் ஆகியோர் கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது: 6 ஆண்டுக்கு மேலாக கிருஷ்ணகிரி […]