புறநானூற்றில் ஆட்சியியல்
புறநானூற்றில் ஆட்சியியல் முனைவர் கு. கணேசன், சாகித்திய அகாதெமி எழுத்தாளர், சேலம் உலகில் ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ் மக்களின் வாழ்வியலை வகுத்துக்காட்டும் கருவூலமாக தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே சங்க இலக்கியங்கள். சங்க நூல்கள் மூன்று காலங்களையும் முகிழ்க்கும் பெட்டகம். அவை தமிழர்தம் பண்பாட்டுக் கூறுகளை வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவை. இது வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட நூலாகும். சங்க காலத்தின் குறைபாடுகளைக் களைந்து வெளிக் கொணர்ந்தவை திருக்குறள். அன்றைய காலத்தின் […]