நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005

1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின் போது மங்கலம், அய்யம்பேட்டை, புதூர், கோபிநாதப்பெருமாள் கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டனம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம்  ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய பதிவுகளில் திருநாட்டியத்தான்குடி வரையிலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றிய நாளிதழ் செய்திகளைக் கண்டோம். இப்பதிவில் உள்ளிக்கோட்டையில் திரு மாதவகுமாரசுவாமி அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வெளியான […]

களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்

வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை “இறவாப்புகழுடன்” விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம். மனிதனின் சமயப்பற்றினை வெளிக்காட்டும் ஆதார சான்றாக எழுப்பப்பட்டதே “கோயில்” எனலாம். காலத்தால் முந்தைய பல குடவரைக் கோயில்களையும், எண்ணிலா வரலாற்றுக் கல்வெட்டுகளையும் தன்னகத்தே கொண்டது பாண்டியநாடு. பாண்டியநாட்டின் வரலாற்றிச் சின்னங்களுள் ஆண்டிச்சிப்பாறை குடைவரைக் கோயிலுக்கும் இடம் உண்டு. அறியப்படாத பழைமையான நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்று. குகைக்கோயிலின் அமைவிடம்: தென்பாண்டி நாட்டின் […]

கால்நடைகளும் கயிறுகளும்

கால்நடைகளைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் செய்யாதவர்கள் இருவருக்கும் தெரியும்.  ஆனால் கால்நடைகளுக்கும் கயிறுகளுக்கும் உள்ள உறவு விவசாயம் செய்பவர்களுக்கே நிறையப் பேருக்குத் தெரியாது. கொஞ்சம் தெரிந்துகொள்வோமே! தலைக்கயிறு : இது மாடுகளைக் கட்டி நாம் இழுத்துப் பிடிப்பதற்கும் கட்டுத்தரையில் உள்ள முளைகளுடன் சேர்த்துக் கட்டுவதற்கும் பயன்படும் கயிறு ஆகும். இது ஒரு அல்லது ஒன்றரை செ மீ கனமும் ஆறடியில் இருந்து பத்தடிவரை நீளமுள்ளதாகவும்  இருக்கும். முக்கணாங்கயிறு: இது மாட்டை நேரடியாகக் கயிற்றால் கட்டி இழுத்துப் பிடிக்க முடியாது […]

கீழக்குயில்குடி சமணர்மலை

மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டைக்கு எதிரே செல்லும் சாலையில் பயணித்தால் கீழக்குயில்குடி என்ற சிறிய கிராமம் வருகிறது. அந்த ஊர் செல்லும் வழியில் சமணர் மலை என அழைக்கப்படும் பெரிய குன்று ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் பெரிய தாமரைக்குளமும் அய்யனார் கோவிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளன.சமண மதம் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. சமண அறிஞர்கள் பலர் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். கீழக்குயில்குடி சமண மலையிலும் சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சமணர்கள் வருகைக்கு முன் […]

தஞ்சைப் பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு புதிர் !

பெரிய கோயில் என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. இந்தக் கோயிலைக் கட்டியது யார் என்ற வரலாறு தமிழக மக்களுக்கு வெகு காலம் வரை தெரியாமல் இருந்தது. கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் இக்கோயில் கட்டப்பெற்றது என்றும் அவனுக்கிருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் பிரகதீஸ்வரர் மகாத்மியம் என்னும் வடமொழிப் புராணமும் , […]

சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் !

(தமிழி அல்லது தமிழ் பிராமி (பொ.ஆ.மு.5 – பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ்மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிறபெயர்கள் : இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ்பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. வர்க்க […]

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரிவடிவங்களாக கருதப்பெற்றது. ஒரு மொழிக்கு இருவேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர் மக்களிடையே குழப்பத்தை […]

மொரீசியசில் தமிழர்கள்

மொரீசியசுதீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீதொலைவில் இந்தியப் பெருங்கடலில் 2100 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்டதீவுகள் உள்ளன.மொரீசியசு என்ற பெயர் மொரீசியசு தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்சு, அகலேகா, புனிதபிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்சு, மொரீசியசு தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியசின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச்சிறிய தீவு. […]

சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள். வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. பொருள் நிறைந்ததாய் மாற்றுகின்றன. பொருள் என்றவுடன் வாழ்வதற்குப் பொருள் வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்று படித்தவாசகம் ஒன்று நினைவுக்குளத்தில் நீச்சலடிக்கின்றது ஆம், வாழ்க்கை பொருளால் ஆனது. பொருள் நிறைந்தது. மனிதன் இனக்குழு சமூகமாக வாழ்ந்த போது தன்னிடமுள்ள பொருளைக் […]

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை !

“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்,அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்” கவிஞர் கண்ணதாசனின் இனியகவி மொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனியகுரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன்மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும் என்ற வினாவை […]