சோழர் காலத்தில் யானையை கோழி வென்றது : தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல்

”கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்,” என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், பத்மாவதி கூறினார்.சென்னை, தமிழ் இணைய கல்வி கழகத்தில், ‘தகவலாற்றுப்படை’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘பழந்தமிழ் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில், பத்மாவதி பேசியதாவது: தமிழ் மொழிக்கு, சங்க காலத்தில் எழுத்து இருந்ததா, இல்லையா என்ற கேள்வி, 1882ல், தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும் வரை நீடித்தது. வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி, கே.வி.சுப்ரமணிய அய்யர், டி.வி.மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்களால், […]

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்-அழியா தமிழ்

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம். source : vivasaayi.com

கோட்டையைப் பிடிப்போமா ?!

தமிழகமே ‘கோட்டையைப் பிடிக்கப் போறது யாரு’ன்னுதான் பேசிக்கிட்டு இருக்கு. எல்லாருமே கோட்டைக்குப் போக ஆசைப்படும்போது, நமக்கு மட்டும் ஆசை வரக் கூடாதா? ஜரூராகக் கிளம்பிவிட்டோம் 400 வருட பழமைமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை நோக்கி! ஊருக்குள் நுழைந்தாலே, ஏதோ வெளிநாட்டுக்குள் நுழைந்த எண்ணம் ஏற்படுகிறது. இன்னமும் டேனிஷ் கட்டுமானங்கள் சிதையாமல் அப்படியே இருப்பது பிரமிப்பு.  கோட்டை நுழைவாயில், கவர்னர் மாளிகை, கலெக்டர் பங்களா, தேவாலயங்கள் என்று திரைப்படங்களில் கதாநாயகனும் நாயகியும் ஆடும் வெளிநாட்டு டூயட் லொகேஷனைப் போல இருக்கிறது. […]

பிரான்சு நகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் !

ஐரோப்பிய நாடான பிரான்சில் வருகின்ற மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதன் அனைத்து மாநிலங்களிலும் நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றுபெறுபவர்கள் மேயர் (நகரத்தந்தை) மற்றும் கோன்சியே முனிசிபல் (Conseiller municipal) உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். பிரான்சின் இல் தே பிரான்ஸ் (IL de France) மாநிலத்தில் 95 மாவட்டங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மை மாவட்டங்களில் பிரான்சு வாழ் தமிழர்கள் பலர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக செய்ன் சான் தெனி (Seine saint […]

அங்காடிகளில் குவிந்த மக்கள் : ஊரடங்கு செய்தி எதிரொலி?

பிரான்சு தலைநகர் பாரீசில் தொடர்ந்து உயர்ந்துவரும் கொரோனா நோய்தொற்றினால் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தி பரவியதால் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில், தமிழ் கடைகளில் மக்கள் குழுமி வருகின்றனர். பிரான்சில் தற்போது வரை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5423 என பிரான்சின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (06/03/2020) முதல் பள்ளிகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி […]

பிரான்ஸ் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு!

ஜனவரி 24 ஆம் தேதி ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் நோயாளர் பதிவுகளை உறுதிப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும். ஜனவரி பிற்பகுதியிலும் பிப்ரவரி மாத தொடக்கத்திலும் மொத்தம் 12 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். தற்போது அவர்களனைவரும் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 81 வயதான சீன சுற்றுலா பயணியான 12 வது நபர் உயிரிழந்தார். புதிய நோயாளர் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாமல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் […]