கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 25
ஆரம் என்பது சந்தனப் பூ. இதனைத், ‘திண்காழ் ஆரம்’, ‘ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த’, ‘ஆரம் நாறும் மார்பினை’, ‘ஆரம் நாறும் மார்பினன்’, ‘நறுங் காழ்ஆரமொடு மிடைந்த மார்பில்’, ‘மலைச்செஞ்சாந்தின் ஆர மார்பினன்’ என்றும், சங்க கால மக்கள் சந்தனத்தை மார்பில் பூசிக்கொண்டதை (மதுரைக்காஞ்சி, வரி 715; அகநானூறு, 22:12; குறுந்தொகை, 198:7 மற்றும் 161:6; நற்றிணை, 314:4; குறுந்தொகை, 321:1) போன்ற இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகிறது. சந்தனம் மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு நறுமணப் பொருளாகும். இம்மரம் காடுகளிலும், நாட்டின் பல பாகங்களிலும் வளரும். […]