கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 25

ஆரம் என்பது சந்தனப் பூ. இதனைத்,  ‘திண்காழ் ஆரம்’, ‘ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த’, ‘ஆரம் நாறும் மார்பினை’, ‘ஆரம் நாறும் மார்பினன்’, ‘நறுங் காழ்ஆரமொடு மிடைந்த மார்பில்’, ‘மலைச்செஞ்சாந்தின் ஆர மார்பினன்’ என்றும், சங்க கால மக்கள் சந்தனத்தை மார்பில் பூசிக்கொண்டதை (மதுரைக்காஞ்சி, வரி 715; அகநானூறு, 22:12; குறுந்தொகை, 198:7 மற்றும் 161:6; நற்றிணை, 314:4; குறுந்தொகை, 321:1) போன்ற இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகிறது. சந்தனம் மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு நறுமணப் பொருளாகும். இம்மரம் காடுகளிலும், நாட்டின் பல பாகங்களிலும் வளரும். […]

சோழர் காலத்தில் யானையை கோழி வென்றது : தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல்

”கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்,” என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், பத்மாவதி கூறினார்.சென்னை, தமிழ் இணைய கல்வி கழகத்தில், ‘தகவலாற்றுப்படை’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘பழந்தமிழ் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில், பத்மாவதி பேசியதாவது: தமிழ் மொழிக்கு, சங்க காலத்தில் எழுத்து இருந்ததா, இல்லையா என்ற கேள்வி, 1882ல், தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும் வரை நீடித்தது. வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி, கே.வி.சுப்ரமணிய அய்யர், டி.வி.மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்களால், […]

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்-அழியா தமிழ்

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம். source : vivasaayi.com

கோட்டையைப் பிடிப்போமா ?!

தமிழகமே ‘கோட்டையைப் பிடிக்கப் போறது யாரு’ன்னுதான் பேசிக்கிட்டு இருக்கு. எல்லாருமே கோட்டைக்குப் போக ஆசைப்படும்போது, நமக்கு மட்டும் ஆசை வரக் கூடாதா? ஜரூராகக் கிளம்பிவிட்டோம் 400 வருட பழமைமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை நோக்கி! ஊருக்குள் நுழைந்தாலே, ஏதோ வெளிநாட்டுக்குள் நுழைந்த எண்ணம் ஏற்படுகிறது. இன்னமும் டேனிஷ் கட்டுமானங்கள் சிதையாமல் அப்படியே இருப்பது பிரமிப்பு.  கோட்டை நுழைவாயில், கவர்னர் மாளிகை, கலெக்டர் பங்களா, தேவாலயங்கள் என்று திரைப்படங்களில் கதாநாயகனும் நாயகியும் ஆடும் வெளிநாட்டு டூயட் லொகேஷனைப் போல இருக்கிறது. […]

சீகன் பால்கு – ஓர் எழுத்தின் எச்சரிக்கை

இந்தியக் கிறித்துவத் திருச்சபை வரலாற்றில், தமிழர்களால் குறிப்பாக தலித்துகளால் நினைவு கூரப்பட வேண்டியவர் பர்தலோமேயு சீகன் பால்கு (1682 – 1719). டென்மார்க் நாட்டு வணிகக் குழுக்களும், அய்ரோப்பிய நிறுவனங்களும் தமிழ் மண்ணில் ஆட்சி புரிந்த காலத்தில், கிறித்துவத்தைப் பரப்புவதற்காக சீகன் பால்கு, 1706 சூலை 9 இல் தரங்கம்பாடிக்கு வந்தார். இவர், அடிப்படையில் ஜெர்மனியின் ஹல்லே பல்கலைக் கழக இறையியல் மாணவர். இவரைப் போலவே போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் பல […]

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல்

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது: ஏறக்குறைய ஈராயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பலைக் கொண்டிருக்கும் தென் இலங்கைப் பகுதியில் அகழ்ந்து ஆராயப்பட இருக்கிறது. ஆழ்கடல் தொல்லியலாளர்கள் மாதக்கணக்கில் தொடரும் அகழ்வாய்வினை மேற்கொள்ள இருக்கிறார்கள். பழங்காலங்களில் ரோம் மற்றும் ஆசியாவிற்கும் இடையேயான கடல் வழி வணிகத்திற்கான ஆதாரங்களைத் தேடி மேற்க்கொள்ளப்படவிருக்கிறது. இந்த மூழ்கிய இடம் கடல் மட்டத்திலிருந்து 110 அடி [33 மீட்டர்கள்] ஆழத்தில் […]

தமிழக தொல்லியற் களங்கள் (Archaeological Sites in Tamil Nadu)

கொடுமணல் தொல்லியல் களம்  இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்,  நொய்யல் ஆற்றின்  வட கரையில்,  ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம்,  சங்ககாலச் சேரநாட்டின் தலை நகரமான  கரூரை,  மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. […]

மலேசியாவில் தமிழ்கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு!

மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமை பெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரிபள்ளியில் முதல் அலுவல் பூர்வ தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டது. அன்றுதொட்டு, இன்றுவரை தமிழ்க்கல்வி பலமாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டுசிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத்தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில். தமிழ்க்கல்வியின் 200ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத்தமிழ் அறவாரியம் […]

பிரான்சில் தமிழக மாணவர் படுகொலை !

பிரான்சில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை சேர்ந்த மாணவரொருவர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன். மாணவரான இவர் பாரீசிலுள்ள உயர் மின்னணுவியல் கல்லூரியில் மின்னணுவியலில் முதுகலை மேற்படிப்பு படித்து வந்தார்.கடந்த வியாழனன்று பணி முடித்ததும் பாரீசு வட்டம் 15 இல் உள்ள நண்பரை சந்திப்பதற்காக. மெட்ரோவிற்கு ஏறக்குறைய இரவு 11.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரை கத்தியால் குத்திவிட்டு அவர்கள் […]