சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரிவடிவங்களாக கருதப்பெற்றது. ஒரு மொழிக்கு இருவேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர் மக்களிடையே குழப்பத்தை […]

கையூட்டு வாங்கினாலும், கொடுத்தாலும் மரணதண்டனை விதித்த அரசன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கையூட்டு (லஞ்சம்) கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும்அதைத் தடுக்கத் தவறியஅரசு அதிகாரிக்கும் மரணதண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென்னேசுவரமடம் கிராமம். இங்குள்ள பென்னேசுவரர் கோயில் மிகவும் பழமையானது, பெயர் பெற்றது. இந்தக்கோயில் கல்வெட்டில் இலஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரணதண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது. இதுகுறித்து கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த […]

இன்றைய திருப்பதியும், குமரி கண்டமும்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப்பாயிரம் பாடியபனம் பாரனார் தமிழகத்தின் நிலஎல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி தானா? தென்குமரி என்பது இன்றைய குமரி முனையா அல்லது கடல்கோளால் அழிந்து போன குமரிக்கண்டமா? முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப் பாடும் காரிக்கிழார் என்ற புலவர் தமிழ் ஆட்சிப் பரப்பை அது பனிபடு நெடுவரை வடக்கும்.தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரை பொருதொடு கடற்குணக்கும் குடா அது தொன்று முதிர் […]