கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 5
குறிஞ்சி கடல் மட்டத்திற்கு ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும். பிறசெடிகளுக்கு அத்தகைய வரையறை இச்செடிக்கிருப்பதுபோல் கிடையாது. ஆறாயிரம் அடிக்கு மேற்பட்ட நிலம், மலையும் மலைசார்ந்த பகுதியாகத்தான் இருக்கும். இத்தன்மையின் அடிப்படைக் காரணத்தாலேயே, மலையையும் மலை சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும். இச்செடி ஒன்பது ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைச்சாரலில் கூட்டங்கூட்டமாகப் பூக்கும். இயற்கையில் இத்தகைய வியப்பிற்குரிய […]