கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15
இது ஒரு சிறு செடியில் பூக்கும் பூ. குல்லையின் இலை பொருந்திய நுனியையும், தளிரையும் சங்க கால மகளிர் அணிந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படை (வரிகள் 201-202) வாயிலாக அறிகிறோம். ஆநிரைகளை உடைய பொதுவர், கல்லிடத்தும், காட்டிடத்தும் மலர்ந்த கொன்றை, காயா, முல்லை, வெட்சி, குருந்து, கோடல், பாங்கர் மற்றும் குல்லை முதலிய மலர்களாலாய கண்ணியைச் சூடியவராக வந்ததைக் கலித்தொகை (103:1-4). மேலும், சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய இலக்கியங்களிலும் இப்பூவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கஞ்சங்குல்லையைத் தலைமாலையாக வடுகர் அணிந்ததை, ‘குல்லைக் […]