ஆசுத்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி : நாடாளுமன்ற உறுப்பினர் காோிக்கை!

ஆசுதிரேலியாவின் தேசிய கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராசுபெக்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூக்மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நியூசவுத் வெல்சு நாடாளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆசுத்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். தமிழ்மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவுசுதிரேலிய மாணவர்களும் பயன்பெறமுடியும். ஆசுத்திரேலிய நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கூக்மெக்டர்மாட்.; அவர்கள் தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை சேர்த்திட கோரிக்கை விடுத்த காட்சி மற்றும் நன்றி தெரிவித்த காட்சி.

இதனைக் கருத்தில் கொண்டு ஆசுதிரேலிய அரசு தமிழ் மொழியை தேசியபாடத் திட்டத்தில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்மொழி கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் சமகால மாணவர்களுக்கு மட்டுமன்றி எதிர்காலசந்ததிக்கும் இது பயனுள்ளதாக அமையும் என கூக்மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.

ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி

தமிழ்மொழியை ஆசுத்திரேலியாவின் பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு ஆசுத்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் முன் மொழிந்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *