தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்
உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன். இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு […]