இந்தோனேசியாவில் தமிழர்கள் – தமிழர் வாழும் நாடுகள்

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்சீனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய […]

புதுகை கடலோரப்‌ பசு பகுதி சிவன்‌ ஆலயத்தில்‌ 10-ம்‌ நூற்றாண்டு புத்தர்‌ சிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, நவ. 22: புதுக்‌கோட்டை – ராமநாதபுரம்‌ எல்லையில்‌ கடற்கரையில்‌ அமைந்துள்ள சுந்தரபாண்‌டியன்‌ பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்‌- காமாட்சியம்மன்‌ கோயிலில்‌. 10-ம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த புத்தர்‌ சிலை. கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப்‌பட்டினங்களின்‌ கடல்‌ வாணிப வரலாறு: குறித்து ஆய்வுசெய்துவரும்‌ புதுக்‌கோட்டை அரசு அருங்காட்சியகக்‌ காப்‌பாட்சியர்‌ முனைவர்‌ ஜெ. ராஜாமுகமது புதன்கிழமை களப்பணி மேற்கொண்டபோது இந்தச்‌ சிலையைக்‌ கண்டெடுத்‌துள்ளார்‌. இதுகுறித்து அவர்‌ தெரிவித்தாவது: இப்பகுதியில்‌ பொன்பேத்தி என்னும்‌ ஊரில்‌ மட்டும்‌ புத்தமத .சின்னங்கள்‌ காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்‌கள்‌ […]

ஜல்லிக்கட்டு வரலாறு

பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் எம் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.  ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான் விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் […]

சோழர் படை

சோழர் படை  என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். படை : கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே […]

ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு மற்றும் நடுகல் தொகுப்பு கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சிவகுரு மற்றும் வெங்கடாசலபதி ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட நடுகல் தொகுப்பு மற்றும் பாறை கல்வெட்டு, பழமையான கோட்டை சுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழுவினர் கூறியதாவது: படுதேப்பள்ளியில் சுமார் 10 அடி உயரமுள்ள […]

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல்

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது: ஏறக்குறைய ஈராயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பலைக் கொண்டிருக்கும் தென் இலங்கைப் பகுதியில் அகழ்ந்து ஆராயப்பட இருக்கிறது. ஆழ்கடல் தொல்லியலாளர்கள் மாதக்கணக்கில் தொடரும் அகழ்வாய்வினை மேற்கொள்ள இருக்கிறார்கள். பழங்காலங்களில் ரோம் மற்றும் ஆசியாவிற்கும் இடையேயான கடல் வழி வணிகத்திற்கான ஆதாரங்களைத் தேடி மேற்க்கொள்ளப்படவிருக்கிறது. இந்த மூழ்கிய இடம் கடல் மட்டத்திலிருந்து 110 அடி [33 மீட்டர்கள்] ஆழத்தில் […]

உலக மரபுச் சின்னம் தாராசுரம்

தமிழ்நாட்டில் யுனஸ்கோ நிறுவனத்தினால் பாதுகாப்பட வேண்டிய உலக மரபுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பெருமையுடைய கோயில்களுள் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் கொத்துக்கொத்தாக காட்சியளிப்பது இந்தியாவில் வேறெங்கும் பார்க்க இயலாத அதியமாக தோன்றுகிறது. விரல்நுனி அளவிலிருந்து விரல், கை, முழங்கை, எட்டுவகையிலான எட்டு தாளம், ஒன்பது வகை நவதாளம், பத்துமடங்கு தசதாளம் என்றெல்லாம் விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன் […]

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 02 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம்

தங்க மண்ணில் தங்கிய தமிழர்களின் வாழ்வில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இரண்டாம் பாகம் அலசுகிறது (பசுபதி ஐயரும் மகன் வெங்கட்ராமனும்) 25 ஆகஸ்ட் 2013 பர்மாவில் 19 ஆம் நூற்றூண்டில் குடியேறி, கடின உழைப்பால் சமூகத்தில் முன்னேற்றமடைந்திருந்த தமிழர்களின் வாழ்நிலையை இரண்டாம் உலகப்போரும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கடுமையாக பாதித்தன. அமெரிக்காவின் பர்ல் துறைமுகத்தை 1941 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கிய ஜப்பான், தென்கிழக்கு ஆசியா மீதான தரைவழித் தாக்குதல்களை துவக்கியது. […]

பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா?

பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம்  1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு    1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன்பட்டணம் (‘Maadarasanpattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது […]

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை

தமிழக அரசியலைப் பொறுத்தவரை இதுவொரு வலுவான கோட்டை. ஆட்சி அதிகாரமெல்லாம் குவிந்து கிடப்பது இங்குதான். தமிழகத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுவதும் இங்கேதான். சட்டசபை, தலைமைச் செயலகம் என எல்லா செல்வாக்குகளும் இங்கு குழுமியிருப்பதால், அரசியல்வாதிகள் அனைவரின் உச்சபட்ச இலக்கு இங்கு வந்து அமர்வதுதான். அரசியலில் அசுர பலத்துடன் இருக்கும் இந்தக் கோட்டை உண்மையில் மிகவும் பலவீனமானது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோட்டைகளோடு ஒப்பிடும்போது இந்தக் கோட்டையின் மதில் சுவர்கள் உயரம் குறைந்தவை. இயற்கை அரண்களும் கிடையாது. இதன் பெயர் புனித […]