பழந்தமிழர்களின் தொழில் மேன்மை
“பண்டையத்தமிழ் மக்கள் வணிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கினர் என்பதை அண்மைக்காலத் தொல்லியல், கல்வெட்டியல், நாணய இயல் சான்றுகள் உணர்த்துகின்றன. இதனைச் சங்க இலக்கியங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள் (தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பக்: 79). தமிழர்கள் இரோம் நாட்டிற்கும், தாய்லாந்திற்கும் சென்று தங்கி வணிகம் புரிந்ததையோ, அவர்களின் பரவலான கல்வியறிவையோ சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை என்கிறார் அவர் (பக்: 80) சங்க காலத்தில் “எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு மிகுதியாக […]