இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது!
இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான் நினைவுகூர்ந்தேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தி வளமுடன் இருந்த அந்த ஊர் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் இலக்கியங்கள் கூறும் பகுதியை எடுத்து விளக்கினேன். இன்று அந்த ஊரின் நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த அந்தப் பேராசிரியருக்கு இடைக்கழிநாட்டில் திருமணத்திற்குப் பெண் […]