லெயோன் புருஷாந்தி (LEON PROUCHANDY)

லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் “பிரவே” வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர். பெரும் செல்வ வளம் பெற்றிருந்த லெயோன் புருஷாந்தி அவர்கள் சைக்கோனில்(வியட்நாம்) வாழ்ந்த தமிழர்களால் […]