மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 8

பல தமிழ்ப் பள்ளிகளையும் ஏற்படுத்தியவர். 1986-ஆம் ஆண்டு பண்டிதரின் நூற்றாண்டு விழா மொரீசியசில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நினைவாக சைமின் கிரேனியர் என்ற இடத்திலுள்ள பள்ளிக்கு பண்டிதர் சுப்பராயன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புகழஞ்சலியில் கலந்து கொண்ட மேதகு கவனர் ஜெனரல் வீராசாமி ரிங்காடு, “பெருமாள் சுப்பராயன் ‘பண்டிதர்’ என எல்லோராலும் அழைக்கப்பட்டார். இப்பட்டத்திற்கு எல்லா வகையிலும் இவர் தகுதி படைத்தவர். இப்பட்டம் அவருக்கு சூட்டப்பட்டது என்பதை விட அவரால் சம்பாதிக்கப்பட்டது என்பதே பொருந்தும்.செயின் கிரேனியேரிலுள்ள பள்ளியொன்று பெருமாள் சுப்பராயனின் […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 7

தகவல் தொடர்பில் தமிழ் வானொலி : மொரீசியசு வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினந்தோறும் அரைமணிநேரம் நடை பெறுகிறது. மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மொரீசியஸ் கலைஞர்கள் தமிழகக் கலைஞர்களின் அரைமணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது. தை பூசக் காவடி திருவிழாவுக்கு முந்திய நாள் இரவு பத்து மணிமுதல் மறுநாள் காலை ஆறு மணிவரை முருகன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் காலை பத்துமணியளவிற்குச் சிறப்பு நிகழ்ச்சி உண்டு. தொலைக்காட்சி : மாதத்தில் இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்டு. தமிழ் […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 6

1950 முதல் இன்று வரையான இலக்கியங்கள் : இக்காலக்கட்டத்தில் The Peacock (1961), L.Eclaireur 1963, Tamil Voice (1964) ஆகிய இதழ்கள் வெளிவந்தன. ‘ஒளி’ ‘சக்திவேல்’ என்ற இரு வார இதழ்களிலும் பெரும்பாலான செய்திகள் மும்மொழிகளில் (பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ்) வெளிவருகின்றன. 1970-ஆம் ஆண்டு அ.சுப்பையா முதலியார் ‘பிரார்த்தனை மாலை’ பாடியுள்ளார். 1974இல் ‘தினசரி பிரார்த்தனைத் திரட்டு’ சரவண ஐயரால் எழுதப்பட்டுள்ளது. 1977-இல் வெளியான மொரீசியசு முருகன் பாமாலையை சிவன் திருமலைச் செட்டி எழுதியுள்ளார். பேராசிரியர் […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 5

கல்வி :1810-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய அந்நாளில் கூட தமிழர்களுக்கென்று திண்ணைப் பள்ளிகள் இருந்தன. மாலை நேரங்களில் தமிழுடன் கணிதமும் கற்பிக்கப்பட்டது என ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளனர். 1865-ஆம் ஆண்டளவிலே 26 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. 1872-ஆம் ஆண்டில் பல தமிழ் நூல்கள் இங்கு வரவழைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் கல்வித் திட்டத்தில் தமிழ் இடம் பெற்றது. தமிழ் கற்க விரும்பிய பள்ளிக் குழந்தைகளுக்கு முறைமையான ஆசிரியர் பயிற்சி அளிக்கத் தமிழகத்திலிருந்து தமிழாசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். மொரீசியசு சூழ்நிலைகளுக்கேற்றவாறு தமிழ்ப் […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 4

பெயர்கள் : சுப்பையா, சந்நியாசி, சங்கிலி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. நம்பி, வெள்ளி வீதி, நக்கீரன், மங்கையற்கரசி, மணிமேகலை, கண்ணகி, மாதவி, சிவகாமி, மீனாட்சி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. சில பெயர்களை மாற்றி அழைக்கின்றனர். முத்தையா-மூச்சியா, முருகன்-மூர்கன், வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் என நல்ல தமிழ் பெயர்களும் பிரஞ்சு தொடர்பினால் திரிந்து வழங்குவதைக் காணலாம். பழக்கவழக்கங்கள் : குழந்தை பிறந்தால் 30 நாள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 3

தமிழரின் இன்றைய நிலைசமயம் :தமிழர்கள் மொழியை மறந்து விட்டாலும் இன்றும் தங்களைத் தமிழர்கள் என்று உணர்வது சமயத்தால்தான். மொரீசியஸ் முழுவதும் சுமார் 125 கோயில்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை, இராமன், வீரமாகாளி அம்மன்,  முனீஸ்வரர், மதுரை வீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களுக்கு உருவங்கள் உண்டு. தலைநகரிலுள்ள சொக்கலிங்கம் – மீனாட்சியம்மன் கோயில் பெரியது. தைப்பூசத்தில் காவடி எடுப்பது உண்டு. தைபூசமே மிகப்பெரிய திருவிழாவாகும். இந்நாள் பொது விடுமுறை ஆகும். கொடியேற்றம் தொடங்கி, […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 2

1. முதலாவது கட்டம் : 1728-ஆம் ஆண்டு பெநுவா தூய்மா என்பவர் மொரீசியசின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தார். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களேயாவர். 1735-ஆம் ஆண்டு […]

மொரீசியசில் தமிழர்கள்

மொரீசியசுதீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீதொலைவில் இந்தியப் பெருங்கடலில் 2100 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்டதீவுகள் உள்ளன.மொரீசியசு என்ற பெயர் மொரீசியசு தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்சு, அகலேகா, புனிதபிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்சு, மொரீசியசு தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியசின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச்சிறிய தீவு. […]