பூம்புகார் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!
விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக்கடற்கரையை அலங்கரித்த பண்டைய வணிக நகரமாகும்.கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் மரக்காணம் என்ற பெயர் வந்தது என்பர். முதலாம் இராசராசன் காலத்தில், மனக்காணமான இராசராசப் பேரளம் என்று உப்பளங்களில் இருந்து வரும் வருவாய் கொண்டு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனக்காணம், பின்னர் மரக்காணமாக மறுவி இருக்கவும் வாய்ப்பு […]