அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு
கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன. இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது அழகன்குளம் எனும் ஊர். இங்கு செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழ்நாடு அரசு தொல்பொருள் […]