தமிழுக்காக குவிந்த இளைஞர்கள் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர்மாநாடு 2016

கடந்த வாரம் (23, 24 ஆகிய தேதிகளில்) உலகமே படுவிரைவாக இயங்கிக் கொண்டிருந்தபோது, ஓசையின்றி ஒரு மிகச் சிறந்த நிகழ்வு சிங்கையில் நடைப்பெற்றது. பல இளைஞர்கள் கூடி,மிகச்சிறப்பாக நடைபெற்ற சிங்கப்பூர்த்தமிழ் இளையர் மாநாடு 2016 தான் அது. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மாணவர்கள் கடுமையாக உழைத்து இந்நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 150 இளையர்கள் இதில் கலந்துக் கொண்டனர் இன்றைய இளையர்களின் கையச்சு; நாளைய தலைவர்களின் பாதச்சுவடு எனும் கருப்பொருளைத். தாங்கி மலர்ந்தது […]

மலேசியாவில் தமிழ்கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு!

மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமை பெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரிபள்ளியில் முதல் அலுவல் பூர்வ தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டது. அன்றுதொட்டு, இன்றுவரை தமிழ்க்கல்வி பலமாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டுசிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத்தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில். தமிழ்க்கல்வியின் 200ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத்தமிழ் அறவாரியம் […]