தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 02 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம்
தங்க மண்ணில் தங்கிய தமிழர்களின் வாழ்வில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இரண்டாம் பாகம் அலசுகிறது (பசுபதி ஐயரும் மகன் வெங்கட்ராமனும்) 25 ஆகஸ்ட் 2013 பர்மாவில் 19 ஆம் நூற்றூண்டில் குடியேறி, கடின உழைப்பால் சமூகத்தில் முன்னேற்றமடைந்திருந்த தமிழர்களின் வாழ்நிலையை இரண்டாம் உலகப்போரும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கடுமையாக பாதித்தன. அமெரிக்காவின் பர்ல் துறைமுகத்தை 1941 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கிய ஜப்பான், தென்கிழக்கு ஆசியா மீதான தரைவழித் தாக்குதல்களை துவக்கியது. […]