மலேசியாவில் தமிழ்கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு!

மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமை பெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரிபள்ளியில் முதல் அலுவல் பூர்வ தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டது. அன்றுதொட்டு, இன்றுவரை தமிழ்க்கல்வி பலமாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டுசிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத்தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில். தமிழ்க்கல்வியின் 200ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத்தமிழ் அறவாரியம் […]

மொரீசியசில் தமிழர்கள்

மொரீசியசுதீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீதொலைவில் இந்தியப் பெருங்கடலில் 2100 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்டதீவுகள் உள்ளன.மொரீசியசு என்ற பெயர் மொரீசியசு தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்சு, அகலேகா, புனிதபிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்சு, மொரீசியசு தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியசின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச்சிறிய தீவு. […]

இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரியை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்த கனடா அரசு

கனடா அரசு 2017-ம் ஆண்டு முதல் இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனிநபர் முன்மொழிவாக சுகாபரோ-ரூச் (ஸ்காபரோ-ரூஜ்) பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அரி ஆனந்தச ங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு கடந்த மே மாதம் 20ஆம் திகதியும் செப்ரெம்பர் 29 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின் அனைத்துக் கட்சிகளின் ஒட்டு மொத்த. ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும் […]

140 ஆண்டுகளாக கொரியாவை ஆட்சி செய்தது தமிழ் பெண் – ஒடிசா பாலு ஆச்சர்ய தகவல்

கொரியாவில் 140 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஆட்சி புரிந்துள்ளதாக கடல்சார் தமிழ்பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது தமிழர்களின் தொல்பழங்கால கற்காலம் என்பது 17 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது. தமிழர்களின் ஆமை வழி கடல்வணிக பயணத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தமிழ் தொன்மங்களை பரவ ஆரம்பித்தது. குறிப்பாக இந்தோ,பசுபிக்கடல் வழியே ஆப்ரிக்கா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சீனா, கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் தமிழர்களின் அடையாளங்கள் ஏராளம் உள்ளன.இதில், தமிழ் அரசர்கள் […]

பிரான்சில் தமிழக மாணவர் படுகொலை !

பிரான்சில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை சேர்ந்த மாணவரொருவர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன். மாணவரான இவர் பாரீசிலுள்ள உயர் மின்னணுவியல் கல்லூரியில் மின்னணுவியலில் முதுகலை மேற்படிப்பு படித்து வந்தார்.கடந்த வியாழனன்று பணி முடித்ததும் பாரீசு வட்டம் 15 இல் உள்ள நண்பரை சந்திப்பதற்காக. மெட்ரோவிற்கு ஏறக்குறைய இரவு 11.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரை கத்தியால் குத்திவிட்டு அவர்கள் […]

ஆசுத்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி : நாடாளுமன்ற உறுப்பினர் காோிக்கை!

ஆசுதிரேலியாவின் தேசிய கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராசுபெக்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூக்மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நியூசவுத் வெல்சு நாடாளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆசுத்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். தமிழ்மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் […]