புதுகை கடலோரப் பசு பகுதி சிவன் ஆலயத்தில் 10-ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை, நவ. 22: புதுக்கோட்டை – ராமநாதபுரம் எல்லையில் கடற்கரையில் அமைந்துள்ள சுந்தரபாண்டியன் பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்- காமாட்சியம்மன் கோயிலில். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை. கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப்பட்டினங்களின் கடல் வாணிப வரலாறு: குறித்து ஆய்வுசெய்துவரும் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் ஜெ. ராஜாமுகமது புதன்கிழமை களப்பணி மேற்கொண்டபோது இந்தச் சிலையைக் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தாவது: இப்பகுதியில் பொன்பேத்தி என்னும் ஊரில் மட்டும் புத்தமத .சின்னங்கள் காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் […]