ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதி கரை பகுதியில் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட ஐந்து பஞ்சபூத சிவன் கோயில்கள் உட்பட மொத்தம் 21 சிவன் கோயில்கள் உள்ளன.ஆத்தூரை சேர்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் நதிக்கரைப் பகுதியில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தேவியாகுறிச்சி கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல், பெரியேரி,இந்திராநகர்,ஆரகலூர் ஆகிய இடங்களில் தலா இரண்டு நாட்கள் என மொத்தம் ஏழு போர் வீரர்களின் நடுகற்களை கண்டுபிடித்துள்ளார்.

தொல்லியல் ஆய்வாளர் வெங்கடேசன் கூறியதாவது ,ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் ஏழு இடங்களில் கிடைத்துள்ள நடுகற்கள் உருவத்தில் இடது கையில் வில்லும் வலது கையில் அம்பு ,வில் அம்பு வைக்கும் கூடை மற்றும் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளது. 12 ,13ம் நூற்றாண்டில் மகதை மண்டலம் ஆக இருந்த இப்பகுதியில் கால்நடைகளை கைப்பற்றுதல் அதை மீட்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடுகிறது. எதிரி நாடுகளுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்குகான நடுகல் இப்பகுதியில் நிகழ்ந்துள்ள போர்களை பதிவுசெய்யும் வரலாற்று நிகழ்வுகளாக உள்ளதால் இந்த நடுகற்களை அரசு பாதுகாக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.