இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல்

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது:
Inline image 1

ஏறக்குறைய ஈராயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பலைக் கொண்டிருக்கும் தென் இலங்கைப் பகுதியில் அகழ்ந்து ஆராயப்பட இருக்கிறது. ஆழ்கடல் தொல்லியலாளர்கள் மாதக்கணக்கில் தொடரும் அகழ்வாய்வினை மேற்கொள்ள இருக்கிறார்கள். பழங்காலங்களில் ரோம் மற்றும் ஆசியாவிற்கும் இடையேயான கடல் வழி வணிகத்திற்கான ஆதாரங்களைத் தேடி மேற்க்கொள்ளப்படவிருக்கிறது.

இந்த மூழ்கிய இடம் கடல் மட்டத்திலிருந்து 110 அடி [33 மீட்டர்கள்] ஆழத்தில் தென்னிலங்கையின் கோதாவய [Godavaya] என்ற மீன்பிடி கிராமத்திற்கு அருகில் இருக்கிறது. இவ்விடத்தில் தான் 1990-களில் ஜெர்மானிய தொல்லியலாளர்கள் ஒரு துறைமுகத்தினைக் கண்டறிந்தார்கள். இத்துறைமுகப் பட்டினம் மிக முக்கியமான கடல் வழி மார்க்கமாக “கடல் வழி பட்டு வணிகத்தில்” கி.பி. 2-ம் நூற்றாண்டில் திகழ்ந்துள்ளது.

வெறும் பத்தாண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த மூழ்கிய கப்பலில் தொல்லியலாளர்கள் கடலில் நூற்றுக்கணக்கான வருடங்களாக மிகக் கடுமையான கடல் நீரோட்டங்களுக்கிடையேயும் மேலும் எப்போதாவது ஏற்பட்ட ஆழிப் பேரலையான சுனாமி போன்றவற்றிற்கிடையேயும் கிடைக்கபெற்றுள்ள மிக உறுதியான உலோக கட்டிகள் மற்றும் கண்ணாடி பாளங்கள், மட்பாண்டங்கள் போன்றவற்றைக் கொண்ட மற்ற இன்னபிற பண்டைய சரக்குப் பெட்டிகள் போன்றவற்றினைப் பற்றி மேலும் ஆதாரங்களைக் கண்டடைய அகழ்வாய்வில் ஈடுபட இருக்கிறார்கள்.

Institute of Nautical Archaeology at Texas A&M University என்ற பல்கலைகழகத்தின் முதல்வரான Deborah Carlson, இங்கு கிடைத்திருப்பவை அனைத்தும் நன்றாக உடைந்துள்ளன என்கிறார். இந்தத் தேடலை தலைமைப்படுத்தி கோதாவய [Godavaya] மீன் பிடி கிராமத்திற்கு செல்லவிருக்கும் இவருடன் அமேரிக்கா, இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சக ஆய்வாளர்கள் செல்லவிருக்கிறார்கள்.

இந்தியப் பெருங்கடலுக்கு நுழைவாயிலாக இருந்த செங்கடலுக்கான தொடர்பினை, கி.மு. முதல் நூற்றாண்டில் எகிப்தினை யவனர்களான ரோமன்கள் பிடித்த பின்பு கிழக்கிற்கும் மேற்க்கிற்க்கும் இடைப்பட்ட வணிகம் அதிகரித்திருந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி. முதலாம் நூற்றாண்டினைச் சேர்ந்த கிரேக்கக் கையேடான “Periplus of the Red Sea [Periplus of the Erythraean Sea]” என்ற நூலும் செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கடலோடிகள் பொருட்களை வணிகப்படுத்தி இந்தியப் பெருங்கடலில் வாங்க, விற்க முனைந்துள்ளனர்.

Carlson அவர்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது வணிகத்தின் ஒரு பகுதியாக இருந்த கப்பல் இல்லை என்கிறார். இது ரோமிற்கு பயணப்பட்ட கப்பல்தான் என்பதும் ஆதாரப்பூர்வமாகவில்லை. அதேநேரம் தொல்லியலாளர்களால் இக்கப்பல் எவ்வாறு மூழ்கியது என்பதையும் கண்டறிய இயலவில்லை. அதற்கு “கடுமையான கடல் நீரோட்டங்கள்” கடந்த வருடங்களில் ஆய்விற்காக ஆழ்கடலுக்குள் சென்றவர்களை கடினப்படுத்தியுள்ளது என்கிறார். ஆனால் மூழ்கிய இக்கப்பலில் கண்டெடுக்கப்பட்ட ஆய்வுகள், இந்தத் தீவு வழியாக சென்ற வணிகப் பொருட்கள் பல மத்தியத் தரைக்கடலை அடைந்துள்ளதால், இந்த வணிகத் தொடர்புகள் இலங்கையை மிக முக்கிய அச்சாணிப் பகுதியாக காட்ட உதவும் என்று சொல்கிறார்.

கோதாவய [Godavaya] அகழ்வாய்வின் முதல் தடையங்கள் 2003-ம் ஆண்டு ஒரு உள்ளூர் மீனவர் உள்ளே மூழ்கி சில பழைமையான பொருட்களுடனும் ஒரு அரவைக் கல் போன்ற ஒரு சிறு இருக்கையுடன் திரும்பி வந்தார். இதே போன்ற கற்கள் தூபிகள் எனப்படும் புத்த நினைவுச் சின்னங்களில் காணப்படுவதாக Carlson கூறுகிறார்.

திருமதி. Carlson அவர்கள் இந்த அகழ்வாய்வினை 2010-ம் ஆண்டு முதன்முதலாக பார்த்தார். அவரும் அவருடைய சக ஆய்வாளர்களும் 2011 முதல் 2013 வரை மூன்று தொடர்ச்சியான தேடுதல் பணிகளில் ஒரு பகுதியாக ஆவணப் படுத்தியுள்ளனர். இதுவரை அக்கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து கிடைத்த பெரும்பான்மையான பொருட்கள் பலவும் அதனுடைய மூல வடிவத்திலேயே கிடைக்கப்பெற்ற உள்ளூர் பொருட்களாக இருந்துள்ளன. பல புத்த வடிவான அரவை கற்களாகவும்; இரும்பு மற்றும் தாமிரப் பாளங்கள் [துருப்பிடித்தலின் மீதமாகக் கூட இருக்கலாம்]; தமிழ்நாட்டின் தென் கடற்க்கரைப் பகுதியில் [முக்கியமாக கடலூர், பழனி, தாமிரபரணி & காவிரி ஆற்றுப் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.] உருவாக்கப்பட்ட நீல-பச்சை மற்றும் கருமையான கண்ணாடி உலோக வார்ப்பு பாளக் கட்டிகள் போன்றவை கிடைக்கப்பெற்றுள்ளன. இவைகள் பாத்திரங்கள் மற்றும் மணிகள் செய்ய உருக்குவதற்காக எடுத்துச் செல்லப் பட்டிருக்கலாம்.

இந்தக் கப்பலின் வயதினைக் கண்டறிய கார்ல்சனும் அவரது சக ஆய்வாளர்களும் மூன்று மென்மையான மரத்தாலான மாதிரிகளை எடுத்து இரு வெவ்வேறு வகையான ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கப்பலின் மீதமாக இருக்கலாம் என்றறியப்படும் இம்மரத்துண்டுகள் குறைந்தபட்சம் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் அல்லது கி. பி. முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றறியப்பட்டுள்ளது.

இந்த மேடான கடலடிப் பகுதி 20க்கு 20 அடி என்ற அளவில் கடலுள்ளே இருக்கிறது. குழுவினரால் இந்த கடல் மூழ்கியப் பகுதி எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்று அவர்களின் குறுகியத் தேடலில் அறியயியலவில்லை. இவ்வருடம் அவர்களுக்கு நேரம் அதிகமுள்ளதாலும் வானிலை சாதகமா உள்ளதாலும் பிப்ரவரி மாதத்தின் நடுவிலிருந்து மே மாதம் வரையான காலக்கட்டத்தில் அவர்கள் உள்ளே மூழ்கி அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்வார்கள் எனத் தெரிகிறது.

மேலும் இந்த மூழ்கியக் கப்பலில் இருந்து கார்ல்சன் மற்றும் அவரது குழுவினர் ஒரு பெரும்பகுதி மரத்துண்டினை கடலுக்குள்ளிளிருந்து வெளியே எடுத்து ஒரு குளத்தினில் வைத்து ஆராய்ந்து காசுகள், வேறு எதுவும் தனிப்பட்ட உடைமைகள் உள்ளனவா எனவும் வேறு என்னதான் அதனிளுள் இருக்கிறது என்றறிய உள்ளதாகவும் தெரிவிக்கிறார். மூடி வைக்கப்பட்டிருக்கும் ஜாடிகுள்ளிருந்து இக்குழுவினரால் பண்டைய உயிரிப் பொருட்களான மகரந்தத் தூள் போன்ற பொருட்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவைகள் அது இக்கப்பல் எந்த வருடம் கடலில் மூழ்கியது என்பதனைக் கண்டறிய உதவும் என்கிறார்.

இத்திட்டத்திற்கான நிதி உதவி National Endowment for the Humanities என்ற நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது. திருமதி. கார்ல்சன் அவர்கள் Institute of Nautical Archaeology-ஐச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் French Centre National de la Recherche Scientifique, the University of California, Berkeley, மற்றும் the Sri Lankan Department of Archaeology போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் கூட்டாகச் சேர்ந்த ஆய்வை மேற்கொள்ளவிருக்கிறார்.


ஏற்கனவே கடந்த ஒரு பதிவில் ஜப்பானில் கண்டறியப்பட்ட கண்ணாடி மற்றும் கல் மணிகள் இந்தியப் பகுதியை சேர்ந்தவை என்றறியப்பட்ட நிலையில் தென்னிலங்கையில் கிடைத்த கப்பலில் இருந்த கண்ணாடிப் பாளங்கலும் மூலப்பொருளாகவே தமிழக துறைமுகப் பகுதியான அரிக்கமேடு, புகார்…etc போன்ற பகுதிகளிலிருந்து கடல்வழி வணிகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
இவ்வகழ்வாய்வில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது, இவர்கள் மேற்கு-கிழக்கு உலகின் கடல் வணிக அச்சாணியாக “இலங்கை” இருந்தது என்று முன்னிறுத்துவது தமிழையும் அதன் தொடர்புகளையும் புறந்தள்ளுவது போலல்லவா தெரிகின்றது. குமரியின் “தென்புலங்காவல்” என்ற பண்டைய பரந்துபட்ட தமிழகமும் இருந்த காலக்கட்டங்களில் தமிழின் கடல்வணிக தொடர்புகளே முற்றிலுமாக உலகின் மேற்கையும் கிழக்கையும் சேர, சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளால் தமிழகத்தில் முற்காலங்களில் இணைத்தனவே அன்றி குறுகிய வரலாற்று அடிப்படைகளால் கையாளப்படும் “புத்த அடையாளம்” கொண்டவையாக காட்டப்படுவதல்ல. தமிழ் அப்போதைய காலக்கட்டத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியில் இருந்தது எனலாம். “சிங்களம்” அப்போது பிறந்த ஒரு ஆரம்பக்கட்டத்தில் இருந்த ஒரு மொழி. ஒரு காலத்தில் பாண்டியர்கள் உலகம் முழுவதும் கடல் வழித் தொடர்பு கொண்டிருந்த மாபெரும் துறைமுகங்களையும் நகரங்களையும் கொண்டிருந்தனர். “உருகுணை” என்ற இலங்கையின் தென் பகுதி முழுக்கவும் பாண்டியர்களால் முழுவதுமாக ஆளப்பட்டது. பின் அதுவே “ரோஹணா” என்று சிங்களத்தில் மொழிமாற்றம் பெற்றது.

அதற்க்கான ஆதாரம்: “Damirica or Limyrike is Tamilagam (Tamil தமிழகம்) – the “Tamil country”. Further, this area served as a hub for trade with the interior, in the Gangetic plain:

Besides this there are ex-ported great quantities of fine pearls, ivory, silk cloth, spikenard from the Ganges, malabathrum from the places in the interior, transparent stones of all kinds, diamonds and sapphires, and tortoise-shell; that from Chryse Island, and that taken among the islands along the coast of Damirica (Limyrike). They make the voyage to this place in a favorable season who set out from Egypt about the month of July, that is Epiphi.
—The Periplus of the Erythraean Sea, 56.

‘தமிரிகே’ (தமிழகம்), வடபுலம் ஆகிய நாடுகளின் சந்தையாக விளங்கிய சந்தை-நகரஙளில் அடுத்து குறிப்பிடத் தக்கவை முதலில் ‘கமரா’, அடுத்து ‘புதுக்கா’ (புகார்), அடுத்து ‘சோபட்மா’ (எயிற்பட்டினம்) என்பன. இங்கெல்லாம் ‘தமிரிக்கா’ என்னும் கப்பலைப் போன்ற அகன்ற, நாட்டுக்கப்பல்கள் கடற்கரை ஓரமாக நிற்கும். அவற்றோடு தனிப்பெரு மரக்கலங்களும் ஒற்றைமரப் படகுகளும் ஒன்றோடொன்று பிணிக்கப்பட்டிருக்கும். இந்தப் பிணிப்புக் கப்பல்களை ‘சங்காரா’ என்றனர். ‘கிரிசி’, கங்கைவெளி ஆகிய இடங்களுக்குச் செல்லும் கப்பல்களைக் ‘கொலந்தியா’ (சொழாந்தியம்) என்றனர். இவை மிகப் பெரியவை. தமிழகத்துப் பொருள்கள் எல்லாமே இந்தச் சந்தைப் பட்டினங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. எகிப்திலிருந்து வந்த பொருள்கள் இறங்கியது இவற்றிற்குத் தனிப் பெருமை. தமிழகப் பொருள்கள் இங்கிருந்து ‘பரலியா’ வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.”

சோழர்கள் ஆட்சி காலங்களில் ராஜேந்திரன் முழு இலங்கையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு உண்டு. சோழர்களும் பிற்காலங்களில் மிகப் பெரியளவில் வணிகமும் ஆட்சிமையையும் கடல் வணிகத்தில் கொண்டிருந்தனர்.

அப்படியாயின் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் களம் கொள்ள இருக்கும் இவ்விடத்தில் தமிழக ஆய்வாளர்களும் இருக்க வேண்டும். அதுசரி, தமிழக தொல்லியல் இடங்களின் வரலாறே அடையாளம் முழுமையாக காட்டப்படாமல் இருக்கும் நிலையில் எவர் இதனை மேற்கொள்ளுவர் என்பது வேதனையும் வருத்தமும் படும் நிலையாகும்… அதுவும் தற்கால இலங்கையில்…

source : groups.google.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *