1330 குறள்களும் ஒரே பட்டு சேலையில்

உலகப் பொதுமறையை உலகிற்கு எடுத்துகாட்ட புதிய முயற்சி !!! 1330 குறளும் ஒரே பட்டு சேலையில்!!! கோவையிலுள்ள பட்டுசேலை நெசவாளர்கள் 1330 குறள்கள் பொறிக்கப்பட்ட சேலையை நெய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். இச்சேலை 6 1/4 மீட்டர்நீளமும், 48 அங்குல அகலமும்,  1 1/2 கிலோ எடையும் கொண்டுள்ளது என பட்டு நெசவாளரான பாலசுப்பிரமணியன் என்பவர் தெரிவித்தார்.  100,000 உரூபாய்கள் விலைமதிப்புள்ள இச்சேலை , 2010 ஆம் ஆண்டு கோவை உலகத்தமிழ் மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.  இச்சேலை நெய்ய நான்குமாதங்களானது என்பது குறிப்பிடத்தக்கது. வடிவமைத்தவர்களுக்கு  எம் நன்றிகளும், பாராட்டுகளும்!

தமிழ்

தமிழ்செய்திகள்

திருக்குறள்

திருக்குறள் சேலை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *