தமிழுக்காக குவிந்த இளைஞர்கள் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர்மாநாடு 2016

கடந்த வாரம் (23, 24 ஆகிய தேதிகளில்) உலகமே படுவிரைவாக இயங்கிக் கொண்டிருந்தபோது, ஓசையின்றி ஒரு மிகச் சிறந்த நிகழ்வு சிங்கையில் நடைப்பெற்றது. பல இளைஞர்கள் கூடி,மிகச்சிறப்பாக நடைபெற்ற சிங்கப்பூர்த்தமிழ் இளையர் மாநாடு 2016 தான் அது. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மாணவர்கள் கடுமையாக உழைத்து இந்நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 150 இளையர்கள் இதில் கலந்துக் கொண்டனர்

இன்றைய இளையர்களின் கையச்சு; நாளைய தலைவர்களின் பாதச்சுவடு எனும் கருப்பொருளைத். தாங்கி மலர்ந்தது இம்மாநாடு தலைமைத்துவம், கல்வி, சமூகச்சேவை, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய நான்கு பிரிவுகளைப் பற்றி இளையர்கள் துடிப்புடனும் முனைப்புடனும் தங்களது குழுக்களில் கலந்துரையாடி, தங்களின் பரிந்துரைகளை முன்மொழிந்தனர். மாறுபட்ட கண்ணோட்டத்தில் புத்தாக்கத்துடன் இளையர்கள் சமூகத்தில் தாங்கள் காண விரும்பும் மாற்றங்களைப் பற்றி உத்வேகத்துடன் கலந்துபேசினர். இளையர்களின் பரிந்துரைகள் இளையர் சித்தாந்தமாக ஆவணப்படுத்தி அமைச்சுகளுக்கும், சமூகமேம்பாட்டு மன்றங்களுக்கும் அனுப்பப்படும்.சமூகத்திட்டப்பணிகள் பற்றியும் இளையர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சொல்லிசை கலைஞர்களான திரு. ஆர்யன் தினேசு கனகரத்தனம், திருசிறி.பகேந்திரன் ஆகியோரின் அங்கம் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஏற்பாடுக்குழு உட்பட்ட தகவல்தொகுப்பு எழுத்தாளர்கள், கல்விஆலோசகர்கள், வல்லுநர்கள், வழிநடத்துபவர்கள், குறிப்பெடுப்பாளர்கள், நெறியாளர்கள் ஆகிய அனைவரின் பங்கும் இம்மாநாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தலைமை பொறுப்பினை செவ்வனே செய்த அருள் ஓசுவின் அவர்களுக்கும் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினையும் வாழ்த்தினையும் நவின்றுக் கொள்கிறேன். எழுச்சியில் பிறந்த இளந்தீ தொடரும் உனது புரட்சி

  • நித்தீசு செந்தூர்

அண்மையில் சிங்கையில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2016.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *