மொரீசியசில் தமிழர்கள்

மொரீசியசுதீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீதொலைவில் இந்தியப் பெருங்கடலில் 2100 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்டதீவுகள் உள்ளன.மொரீசியசு என்ற பெயர் மொரீசியசு தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்சு, அகலேகா, புனிதபிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்சு, மொரீசியசு தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியசின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச்சிறிய தீவு. இது மொரீசியசு தீவின் தென்மேற்கே 400 கி.மீதொலைவில் இருக்கிறது.மொரீசியசு 9 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய தீவுக்கு 370 ஆண்டு குடியேற்றவரலாறு உண்டு. டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் இத்தீவை ஆண்டிருக்கின்றனர். 1968-ஆம் ஆண்டு மொரீசியசு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றது.மொரீசியசு ஒரு வேளாண்நாடு. இந்நாட்டின் தேசியவரவு செலவுதிட்டம் முக்கியமான விளைபொருள்களான கரும்பையும், தேயிலையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.மொரீசியசு பல இனங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களடங்கிய ஒருபன்மைச் சமுதாயம். வரலாற்றுக் காலந்தொட்டு மொரீசியசிலே பிறந்த மொரீசியர்களோடு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தமக்களும் இங்கு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பியர்கள், இந்தியர்கள், கிரியோல்கள், ஆப்பிரிக்கர்கள் எனப்பிரிக்கலாம். 1983-ஆம்ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி 84 சமயங்களைச் சேர்ந்தவர்களும் 66 மொழிகளைப் பேசுகிறவர்களும் உள்ளனர். கிரியோல் என்பது ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர், ஐரோப்பிய மரபினரோடு கலந்ததால் உருவான கலப்பின மொரீசியசு மக்களைக் குறிக்கிறது. பிரெஞ்சு இலக்கண அமைப்பு உடையதும் பெரும்பாலான ஆப்ரிக்கமொழிச் சொற்களையுமுடைய மொரீசியன் கிரியோல் என்ற கலப்புமொழி இவர்களது தாய்மொழியாகும்.தமிழர்குடி பெயர்வுக்கான காரணங்கள். உலகநாடுகளில் தமிழர் இரண்டு விதங்களில் குடியேறினர்.

1. வாணிகத்தின் பொருட்டு கிறித்துபிறப்பதற்கு முன்னரே குடியேறி, 15-ஆம் நூற்றாண்டு வரை வாணிபத்தின் பொருட்டு நடந்த குடியேற்றம்.

2. 18, 19-ஆம்நூற்றாண்டுகளில் பிரஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் தோட்ட வேலைகளுக்குக் கூலி அடிமைகளாய் கொண்டு செல்லப்பட்ட இரண்டாம் கட்ட குடியேற்றம்.

இந்த இரண்டாம் கட்ட குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்றுதான் மொரீசியசு தீவு.இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், ஆர்காட்டு நவாபு முதலியோர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிறுவ தென்தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையப்பட்டுக்காரர்களுடன் ஓயாத போரினைச் செய்து வந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாயதொழிலாளர்களும் தாம். தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக்கொடுமை, கிராமப்புரங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, வட்டிக்கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கொத்தடிமைத்தனம், அடிமைமுறை போன்றவற்றைத் தாங்க முடியாமல், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் நாடுவிட்டு ஓடிப் பிறநாடுகளில் குடியேறினர். தமிழர்குடியேற்றம் மொரீசியசில் தமிழர்குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. முதலாவது கட்டம் :

மொரீசியசின் கட்டட வளர்ச்சிக்காகவும் பிற கைவினை நுட்பவேலைக்காகவும் கைவினைத் திறம்பெற்ற தமிழர்களைக் குடியேற்றியது.

2. இரண்டாவது கட்டம் : ஒப்பந்தக்கூலி முறையில் தோட்டத்தொழிலாளர்களாகத் தமிழர்களைக் குடியேற்றியது.

3. மூன்றாவது கட்டம் : ஒப்பந்தக்கூலிமுறையோ அல்லது வேறெந்த நிபந்தனையோ இன்றி வாணிகத்தின் பொருட்டுத்தமிழர்கள் குடியேறியது முதலாவது கட்டம் 1728-ஆம் ஆண்டு பெநுவாதூய்மா என்பவர் மொரீசியசின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக்கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தார். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள்மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டுவயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களேயாவர்.  1735-ஆம் ஆண்டு மயேதெலபோர்தொன்னே புதுச்சேரியிலிருந்து கப்பல் கட்டுவதற்காகவும் கட்டங்கள்கட்டுவதற்காகவும் தமிழர்களை அழைத்துச் சென்றார். இத்தமிழர்கள் போர்ட்லூயி நகரப்பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஆப்ரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. பிரான்சுதீவை (மொரீசியசு) ஒருநாடாக உருவாக்கியவர் லபோர்தொன்னே. இவரது பணிகளுக்கு உதவியாக நின்றவர்கள் தமிழர்கள். இத்தமிழர்கள் கைவினைத் திறமும் சிறந்ததொழில்நுட்பமும் உடையவர்கள் என்றும் மொரீசியசு வளர்ச்சியில் இவர்களது பங்குகணிசமானது என்று வரலாற்றாய்வாளர் முனிந்திரநாத்வர்மா குறிப்பிடுகிறார். லபோர்.தொன்னேயின் நண்பரும் பாலுவும் வர்ஜினியாவும் என்ற காதல் காவியத்தின் ஆசிரியருமான பெர்னார்தென்தென்சென்பியே புதுச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் சாதுவானவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருந்தனர் என்றுகுறிப்பிடுகிறார். பலதமிழர்கள் இக்காலத்தில் அலுவலங்களில் பணிபுரிந்ததை நபால் குறிப்பிடுகிறார்.பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போர்ட்லூயிசு நகரம் மூன்று பிரிவுகளாக இருந்தது. கிழக்குப்பகுதியில் மலபாரிகள் என்றழைக்கப்பட்ட தமிழர்களும் பிற தென்னிந்தியரும் வாழ்ந்தனர். இப்பகுதியை பிரஞ்சுக்காரர்கள் மலபாரிகள் முகாம் (Camp des Malabars) என்றழைத்தனர்..1810-ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் இருவர் பக்கமும் நின்று தமிழர்கள் போராடியுள்ளனர். ஆங்கிலேயர் தம்படைக்கு உச்சமுடி என்ற தமிழரை தளபதியாக்க எண்ணி இருந்ததை அறிய முடிகிறது.1829 முதல் 1830 வரைநூற்றுக்கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகம் வாயிலாக மொரீசியசில் குடியேற ஃபர்குவார் என்ற ஆங்கிலேயர் ஏற்பாடு செய்தார். 1833-ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு மொரீசியசில் அமலாக்கப்பட்டது.

2-ஆம்கட்டம் தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றம் 1835-ஆம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றது. 1843-ஆம்ஆண்டு மட்டும் 14,634 பேர் குடியேறினர். 1845 முதல் 49 வரை சென்னைத்துறைமுகம் வாயிலாக குடிபெயர்வு நடைபெறவில்லை. 1843-ல் இருந்து 52 வரை 30,334 பேர்குடி பெயர்ந்ததாக அறிகிறோம். குடிபெயர்ந்தத மிழர்களில் பறையரும், வன்னியரும் அதிகமிருந்தனர் என்று பினியோ குறிப்பிடுகிறார். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத்தோட்டத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். முகவர்கள் (Agents) குடியேறுபவர்களுக்கு ஆசைகாட்டி அழைத்து வந்து ஏமாற்றியதை உணர ஆரம்பித்து, அதன் விளைவாக பிற்காலத்தில் பல்வேறு தொழில்களு ம்செய்பவர்களாக இவர்கள் மாறினர். தோட்டத்தில் இவர்கள் பட்டபாட்டை கரும்புத்தோட்டத்தில் என்ற பாரதியின் பாடல்கள் மூலம் உணரலாம்.அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய்காற்றே! -துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? -அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர் 1810-ஆம்ஆண்டு ஆங்கிலேயர் மொரீசியசு தீவைக் கைப்பற்றியதும் மொரீசியசு குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப்பத்திரம் சவரிமுத்து, சின்னத்தம்பி, துரைச்சாமி என்று பலர்தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியேறினர். மொரீசியசுதீவில் தமிழ்மக்கள் தம்முடைய பண்டை நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு இழந்துவிட்டனர் என்றே கூற வேண்டும என்கிறார் தனி நாயகம்அடிகளார்.மொரீசியசின் தலைநகரமாக போர்ட்லூயியின் மத்திய சந்தையிலேயே ஏராளமான தமிழ்வணிகர்கள் வாணிகம் செய்து வந்தனர். இச்சந்தை 1845-இல் திறக்கப்பட்டது. 1853-இல்காப்ரீசி என்ற கப்பலிலும், 1854-இல் ஆசுதிரேலியா என்ற கப்பலிலும் 1855-இல்ஆர்லிகென் என்ற கப்பலிலும் தமிழ்வணிகர்கள் மொரீசியசு வந்தனர். 1862-66 குள் 749 வணிகர்கள் வந்ததாக குறிப்புண்டு. சிறந்த வணிகர்களாக இராமசூரியமூர்த்தி குறிப்பிடுபவர்கள் : எம். கைலாசம்பிள்ளை நல்லசாமி மருதை படையாச்சி, ஏ. சிவராமன், பரிமணம், ஜி.பொன்னுசாமி, டி. வேலாயுதம்பிள்ளை, முதலியோர். 1860-ஆம்ஆண்டு மொரீசியசிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தபோது, பல தமிழ்வணிகர்களும் குடிபெயர்ந்தனர் அவர்களில் ஏ.எசு.அய்யாசாமி, ஏ.ஆர். நல்லதம்பி, எம். பொன்னுசாமி, ஆறுமுகம்செட்டிஅண்ட்கோ, வையாபுரி செட்டிகம்பெனி, ஐ.வேலாயுதன் அண்ட்கோ, இருளப்பிள்ளை அண்ட்கோஆகியோர், தென்னாப்பிரிக்காவுக்கும், புதுச்சேரி, ரீயூனியன், மடகாசுகர் போன்ற இடங்களுக்கும் சென்றனர்.

பன்னெடுங்காலமாக தமிழ்மண்ணைத் தாண்டி மொரீசியசில் இன்னமும் தமிழ்பண்பாட்டை வாழவைக்கும் மொரீசியசு தமிழ்மக்களைப் பற்றிய குறுந்தொடர்.

அயலக தமிழர்கள்

அயலகத் தமிழர்கள்

மொரீசியசு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *