புதுகை கடலோரப்‌ பசு பகுதி சிவன்‌ ஆலயத்தில்‌ 10-ம்‌ நூற்றாண்டு புத்தர்‌ சிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, நவ. 22: புதுக்‌கோட்டை – ராமநாதபுரம்‌ எல்லையில்‌ கடற்கரையில்‌ அமைந்துள்ள சுந்தரபாண்‌டியன்‌ பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்‌- காமாட்சியம்மன்‌ கோயிலில்‌. 10-ம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த புத்தர்‌ சிலை. கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப்‌பட்டினங்களின்‌ கடல்‌ வாணிப வரலாறு: குறித்து ஆய்வுசெய்துவரும்‌ புதுக்‌கோட்டை அரசு அருங்காட்சியகக்‌ காப்‌பாட்சியர்‌ முனைவர்‌ ஜெ. ராஜாமுகமது புதன்கிழமை களப்பணி மேற்கொண்டபோது இந்தச்‌ சிலையைக்‌ கண்டெடுத்‌துள்ளார்‌.

இதுகுறித்து அவர்‌ தெரிவித்தாவது: இப்பகுதியில்‌ பொன்பேத்தி என்னும்‌ ஊரில்‌ மட்டும்‌ புத்தமத .சின்னங்கள்‌ காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்‌கள்‌ கூறியுள்ளனர்‌. அனால்‌ நான்‌ கடந்த மே மாதம்‌ இதே கடற்கரைப்‌ பகுதியில்‌ கோட்டைப்‌ பட்டினத்திற்கு. அருகே புத்‌தர்‌ சிலை ஒன்றைக்‌ கண்டெடுத்தேன்‌.தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள

இந்த புத்தர்‌ சிலை, வட இந்தியாவில்‌ சிறப்‌.புடன்‌ விளங்கிய புத்த மத மையமான நாளந்தாவில்‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ள புத்தர்‌ சிலைகளின்‌ பாணியில்‌ உள்ளது.நின்ற நிலையில்‌ 40 அடி உயரமுள்ள இந்த புத்தர்‌ சிலை கழுத்திலிருந்து கால்பகுதி வரை அழகிய ஆடை அணிந்துள்‌ளது. முகம்வெகு அழகாக செதுக்கப்பட்‌டுள்ளது.

காதுகள்‌ நீண்டு தொங்குகின்றன. நெற்‌றியில்‌ உர்னா என்றும்‌ திலக அடையாளமும்‌, வலது உள்ளங்கையில்‌ டைமண்ட்‌ போன்ற அடையாளமும்‌ காணப்படுகின்‌றன. இவை மகாபுருஷலட்சணம்‌ என புத்த புராணங்கள்‌ கூறுகின்றன.தலைமுடி. சுருள்‌ வில்லைகளாக அமைந்து காணப்படுகிறது. தலையின்‌ உச்சியில்‌ விளக்கின்‌ ஒளி போன்ற உஸ்‌னிசா என்ற அமைப்பு உள்ளது. இது புத்தரின்‌ ஞானத்தைக்‌ குறிக்கும்‌ அடையாளமாகும்‌. வலது கை அபய முத்திரை காட்டுகிறது. இடது கை துணியைப்‌ பிடித்திருக்‌கும்‌ பாவனையில்‌ உள்ளது. பண்டைய சோழ பாண்டிய நாட்டுப்‌ பகுதிகளில்‌ அமர்ந்த நிலையில்‌ உள்ள புத்‌தர்‌ சிலைகள்‌ நிறைய கிடைத்துள்ளன.ஆனால்‌ நின்ற நிலையில்‌ புத்தர்‌ சிலைகள்‌அரிதாகவே கிடைத்திருக்கின்றன.

இப்பகுதிகளில்‌ இதுவரை இத்தகைய நின்ற நிலையிலுள்ள சிலைகள்‌ இரண்டு
மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்த சமய பழமைச்‌ சின்னங்கள்‌ குறித்து ஆய்வு செய்து வரும்‌ தஞ்சாவூர்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தைச்‌ சேர்ந்த முனைவர்‌ பா.ஜம்புலிங்கம்‌ கூறினார்‌. தற்போது சுந்தரபாண்டியன்‌ பட்டினத்‌தில்‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது 3-வது சிலை அகும்‌. தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ சோழன்‌ மாளிகையில்‌ கண்டுபிடிக்கப்பட்ட நிற்கும்‌ புத்தர்‌ சிலை தற்போது தஞ்‌சாவூர்‌ தொல்லியல்துறை. அருங்காட்சியத்திலும்‌, திருவலஞ்சுலியில்‌ கண்டுபிடிக்‌கப்பட்ட புத்தர்‌ சிலை சென்னை அருங்‌காட்சியகத்திலும்‌ உள்ளன.

சுந்தரபாண்டியன்‌ பட்டினம்‌ ஏகாம்பரேஸ்வரர்‌ கோயிலுக்கு அருகில்‌ இடிந்த
மண்டபம்‌ ஓன்று காணப்படுகிறது. இவ்‌விடத்தையும்‌ அதன்‌ கட்டட அமைப்பையும்‌ ஆய்வு செய்ததில்‌, இவ்விடம்‌ புத்தப்‌பள்ளியாக இருந்திருக்கக்கூடும்‌ எனத்‌தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்‌.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *