மக்கள் செலுத்திய வரியை கோயில்களுக்கு வழங்கிய பாண்டிய மன்னன்

சாயல்குடி : சாயல்குடி பகுதி மக்கள் அரசுக்கு செலுத்திய வரியை சிவன் கோயில்களுக்கு பாண்டிய மன்னன் தானமாக வழங்கிய தகவல் தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் அருகே பால்கரையைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி, எம்.ஏ. தமிழ் படித்து வருகிறார். தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவின் வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் சாயல்குடி அருகிலுள்ள மேலச்செல்வனூரில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் கோகிலா, மனோஜ், டோனிகா, பிரவினா ஆகியோருடன் […]

ராயக்கோட்டை அருகே 2,500 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே மலை உச்சியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை அறம் வரலாற்று ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராயக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தில் உள்ள மலை  உச்சியில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான, 50க்கும் மேற்பட்ட வெள்ளை  மற்றும் செந்நிற பாறை ஓவியங்கள் உள்ளன. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல்  ஆய்வாளர்கள் பூங்குன்றன், சுப்பிரமணி, ராஜன் மற்றும் அறம் […]

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தை கற்கால நாகரீகத்திலிருந்து உலோக கால நாகரீகத்திற்கு (Iron Age Civilization) நகர்த்திய உலோகங்களில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொஞ்சம் இரும்புத் தாது நெருப்பில் விழுந்து உருகிக் குளிர்ந்து கட்டி இரும்பான (Wrought Iron) போது  ஆதிமனிதனால்  இந்த உலோகம் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நினைக்கிறார்கள். இரும்பு இவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது உண்மை. இரும்பினால் செய்யப்பட்ட  செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் திறம்படப் பயன்பட்டன. ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம் […]

புதுச்சேரியில் முதுமக்கள் தாழி !

புதுச்சேரியின் அரிக்கமேடு என்னும் பகுதி வரலாற்று முதன்மை வாய்ந்த பகுதியாகும். புதுவையின் எழிலார்ந்த கடற்கரை ஒட்டி அமைந்துள்ள அரிக்கமேடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். என் பிறந்த ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் அரியாங்குப்பம் ஆற்றைக் கடக்கும் பொழுதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்ப்பது என் வழக்கம். நேற்று (31.01.2010) என் பிறந்த ஊர் சென்று பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது இரவு 9 மணியளவில் அரியாங்குப்பம் பகுதியில் கடையில் தொங்கிய ஒரு செய்தித்தாளில் அரியாங்குப்பத்தில் தங்கப் புதையலா ? என்று ஒரு […]

தென்னிந்தியாவிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த புதைபொருள் !

உடல் எரிக்கப்பட்டு எலும்பும் சாம்பலும் வைக்கப்பட்டிருந்த ஏழு பண்டைய தாழிகள் புதுச்சேரி அரிக்கமேடு கிராமத்துக்கு அருகே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரிக்கமேடு தொல்பொருள் ஆய்வு களத்திற்கு அருகில் மணவெளி என்ற இடத்தில் தனியார் ஒருவரின் நிலத்தில் கட்டடம் கட்ட அடித்தளம் தோண்டியபோது இவை கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தாகூர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகிறார். 1989 ஆம் […]

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை கண்டெடுப்பு

தாழியின் தோற்றம் புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள […]

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்தவை

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் முளிமணி தலைமையில் ஒரு குழுவினர் இப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், இப்போது கிடைத்துள்ள ஒரு முதுமக்கள் தாழி காவல் […]

அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன.  இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  தமிழ்நாடு அரசு தொல்பொருள் […]

13ம் நுாற்றாண்டை சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுப்பு

ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதி கரை பகுதியில் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட ஐந்து பஞ்சபூத சிவன் கோயில்கள் உட்பட மொத்தம் 21 சிவன் கோயில்கள் உள்ளன.ஆத்தூரை சேர்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் நதிக்கரைப் பகுதியில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தேவியாகுறிச்சி கிராமத்தில் […]

தொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி, புதிய தலைமுறை இதழ்

2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள் உள்ளன. பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர். ஆழ்கடலுக்குக் கீழ் சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத் […]