கனடா அரசு 2017-ம் ஆண்டு முதல் இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனிநபர் முன்மொழிவாக சுகாபரோ-ரூச் (ஸ்காபரோ-ரூஜ்) பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அரி ஆனந்தச ங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு கடந்த மே மாதம் 20ஆம் திகதியும் செப்ரெம்பர் 29 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின் அனைத்துக் கட்சிகளின் ஒட்டு மொத்த. ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும் இந்த முன்மொழிவு (மசோதா) மீது பேசிய அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கனடிய மக்கள் கனடா வளர்ச்சிக்காக ஆற்றிவரும் பங்களிப்புகளை சுட்டிக்காட்டி முன்மொழிவுக்கு ஆதரவாக உரையாற்றினர். இந்த அறிவிப்பு வெளியிடப்பட காரணமாக திகழ்ந்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரிக்கு கனடியன் தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பு நன்றி தெரிவித்திருக்கிறது.இம்முன்மொழிவு நிறைவேறியது குறித்து அரிஆனந்தசங்கரி தமிழ்-கனடியமக்கள் நாடுதழுவிய வகையில், சமூகத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பு, தமிழ்மொழி, தமிழ்மரபு மற்றும் பண்பாட்டின் செழுமையை அங்கீகரிக்கும் வரலாற்று மைல்கல் இது என கருத்து தெரிவித்தார். அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரிமாதத்தை தமிழ்மரபு மாதம் என அறிவிப்பதன் மூலம் கனேடிய சமூகத்திற்கு தமிழ்-கனேடியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்களையும் தமிழ்மொழியினதும் பண்பாட்டினதும் செழுமையையும் தமிழ் மரபு பற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் எதிர்காலதலைமுறைகளுக்கு ஊட்டவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஆதரிக்க வேண்டும் என்பது இந்த அவையின் கருத்தாகும் என எம்-24 முன் மொழிவு தெரிவிக்கிறது. நான்கு நகரசபைகளும், ஒன்றாரியோ மாநிலமும் தொரன்ரோகல்விச்சபையும் ஏற்கனவே சனவரி மாதத்தை தமிழ்பண்பாட்டு மாதமாக அறிந்தேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் உயிர்ப்பான பண்பாட்டையும் மரபுகளையும் நீண்டவரலாற்றையும் சககனேடியர்களுக்கு வெளிக்காட்டவும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த முன்மொழிவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனமார்க்கம்-யூனியன்வில் தொகுதிக்கான கொன்சவேற்றீவ் பாராளுமன்ற உறுப்பினர் பொப்சொரோயா விவாதத்தின் போதான தனது உரையில் தெரிவித்தார். தமிழர் பண்பாட்டையும், மரபுகளையும், நீண்ட வரலாற்றையும் சகமக்களுக்கு வெளிக்காட்டவும், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த மசோதா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என கன்சர் வேட்டிவ் கட்சி எம்.பி. பாப்சொரோயா தெரிவித்தார்.
1950-களில் தமிழர்கள் முதன்முறையாக கனடாவில் குடியேறினர், அது முதற்கொண்டு கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களும் தங்களது பங்களிப்பை பெருமளவில் அளித்து வந்திருக்கின்றனர். அந்த பங்களிப்பை அறிந்தேற்கும் விதமாக கனடா அரசு தமிழுக்கு இந்த கெளரவத்தை அளித்திருக்கிறது.இந்த அறிவிப்பின் மூலம் கனடா குடிமக்களுக்கு தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் தமிழர்களின் கலை,பண்பாடு ஆகியற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. முதன்முதலாக கனடா தழுவிய வகையில் பாராளுமன்றத்திடல் உட்பட்ட இடங்களில் தமிழ்பண்பாட்டு மாதமாக கொண்டாடும் நிகழ்வுகள் சனவரி 2017ல் ஆரம்பமாகும். இவை கனடாவின் 150ஆம் ஆண்டு நிறைவையொட்டிய கொண்டாட்டங்களுடன் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை அறிந்தேற்கும் விதமாக கனடா அரசு தமிழுக்கு இந்த மேன்மையினை அளித்திருக்கிறது.
அயலக தமிழ்செய்திகள்
அயலகத் தமிழர்கள்
கனடா