உலகில் முதல் முறையாக நாட்டின் பிரதமரான ஒரு தமிழர்

தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் மதராசி என்றோ அல்லது இந்தோ-கயனீசு என்றோஅடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித் தோன்றிகள் ஆவார்கள். பெரும் பான்மையோருக்குத் […]

வசவ சமுத்திரம் : கிழக்கு கடற்கரைசாலையில் தமிழரின் தொன்மையான வணிக நகரம்

அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாயத்தொட்டிகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதேபோன்ற அமைப்பில் தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு உறைகிணறுகள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று 11 உறைகளையும், மற்றொன்று 5 உறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விட்டம், கீழே செல்லச் செல்லஅதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் […]

மாற்றத்திற்கு இதுவே நேரம் – பர்மாவின் தமிழ் இளைஞர்கள் நடத்திய தமிழ்மாநாடு

மாற்றத்திற்கு இதுவே நேரம் என்னும் தலைப்பில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ் இன எழுச்சி, வரலாறு, பண்பாடு, கல்வி போன்ற வாழ்க்கையின் அடிப்படை கடமைகளை இளைஞர்கள் தெரிந்துணர வேண்டுமெனபர் மாநாட்டின் இளந்தமிழர் இயக்கம் நான்காம் முறையாக மேமாதம் 23 ஆம் தேதி பர்மா நாட்டில் இரண்டுநாள் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.  இதில் மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்களும், திரளான தமிழ் மக்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். செய்திகள் தமிழ் தமிழ்செய்திகள் நிகழ்வுகள் பர்மா

புகைப்படங்கள் : சதீசுகுமார்

தமிழ்ப்பற்றும், புகைப்படமெடுப்பதில் ஆர்வமும் கொண்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தவே இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் பிரிவு வாரியாக பதியப்படும். இந்த புகைப்படங்களை எடுத்தவர் தஞ்சையைச் சார்ந்த திரு.சதீசுகுமார். அண்மையில் தன் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். இவரைப் போன்றோரின் புகைப்படத்திறனை போற்றுவது நம் கடமையாகும்.  நீங்களும் படங்கள் அனுப்ப என்ற மின்னஞ்சலுக்கு படைப்புகளைதங்களைப் பற்றிய விவரங்களோடு அனுப்பி வையுங்கள். நன்றி. ஒளி ஓவியம் சதீசுகுமார் புகைப்பட கலைவண்ணம் சங்கவி pepsilays77@gmail.com வாழ்த்துக்கள் பல சதீசு kmrsathishkmr@gmail.com படங்களை பகிர வாய்ப்பளித்த தமிழுள்ளங்களுக்கு […]

பள்ளியை குப்பைத் தொட்டியாக்கிய ஆசிரியர்கள் – ஒரு ஆசிரியையின் வருத்தம்

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் உணவு அருந்திய பொட்டலத்தைக் கூட குப்பைத்தொட்டியில் போடவில்லை. பள்ளியைச் சுற்றிலும் உள்ளூர் மக்கள் சிலர் குடித்துவிட்டு போத்தல்களை வீசியெறிந்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியையின் வருத்தமான பேசுபுக் பதிவு.  பதிவுகள்

புகைப்படங்கள் : சல்மான்

இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் திரு. சல்மான். இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவராவர். ஆசிரியர் பணிசெய்கிறார். தமிழ்ப்பற்றாளர். வாழ்த்துகள் தோழமையே. இயற்கை இயற்கை சல்மான் பறவைகள் பறவைகள் புகைப்பட கலைவண்ணம் புகைப்படம்

கடலுக்கடியில் உறங்கும் தமிழரின் நாகரீகம்

தமிழரின் மிகவும் தொன்மையான துறைமுக நகரமாக காவேரி பூம்பட்டினம் (பூம்புகார்) உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்…  தமிழரின் தொன்மையான பல நூல்களிலும் பூம்புகார் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.ஆனால் அவற்றை மற்றுமே வரலாற்று சான்றுகளாக ஏற்றுகொள்ள முடியாது. ஏனென்றால் பல குறிப்புகள் புனைவாக சொல்லபட்டிருக்கும். அவற்றில் உண்மை எது, புனைவு எது என்று அறிவது கடினம் அப்படியிருக்கும் பொழுது 2002 ஆம் ஆண்டு பூம்புகார் பகுதியில் கடலுக்கு அடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பூம்புகார் […]

1330 குறள்களும் ஒரே பட்டு சேலையில்

உலகப் பொதுமறையை உலகிற்கு எடுத்துகாட்ட புதிய முயற்சி !!! 1330 குறளும் ஒரே பட்டு சேலையில்!!! கோவையிலுள்ள பட்டுசேலை நெசவாளர்கள் 1330 குறள்கள் பொறிக்கப்பட்ட சேலையை நெய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். இச்சேலை 6 1/4 மீட்டர்நீளமும், 48 அங்குல அகலமும்,  1 1/2 கிலோ எடையும் கொண்டுள்ளது என பட்டு நெசவாளரான பாலசுப்பிரமணியன் என்பவர் தெரிவித்தார்.  100,000 உரூபாய்கள் விலைமதிப்புள்ள இச்சேலை , 2010 ஆம் ஆண்டு கோவை உலகத்தமிழ் மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.  இச்சேலை நெய்ய நான்குமாதங்களானது என்பது […]

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது : ஆதிச்சநல்லூர் – 1

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது. சான்றுகளுடன் குறிப்பிட்டால் நம்புவீர்களா ? ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள், புதையுண்டு கிடக்கும் பூமியில், ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற இவ்வூர் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் […]

ஆழிப்பேரலை வெளிப்படுத்திய பழமையான கோவில்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரத்திற்கு வடக்கே ஆறுகி.மீ. தூரத்தில்அமைந்துள்ளது சாளுவன்குப்பம் என்ற கிராமம். கிறித்தவ காலத்தின் தொடக்கநூற்றாண்டுகளிலேயே சாளுவன் குப்பத்திலும் அதைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பக்காலத்தில் திருவீழ்ச்சில் எனப் பெயர் கொண்டிருந்த இவ்விடம் பின்னர் விசயநகரப் பேரரசு காலத்தில், சாளுவ மன்னன் சாளுவ நரசிம்ம தேவராயன் பெயரால் சாளுவன் குப்பம் என்ற பெயர் பெற்றது.  இங்கே தான் யுனெசுகோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தின் […]