தமிழையும் தமிழர் பண்பாட்டையும் போற்றி பேணும் ஓர் அயல்நாட்டு துணைப்பாட நிலையம்

தமிழ் எழுத்துகளால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் படங்கள், சிறு நூலகம், விளையாட்டு பொருட்கள் என பார்ப்பவரைக் அகமகிழ செய்கிறது ஜெய் தமிழ்த் துணைப்பாட நிலையம். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இந்தத் துணைப்பாட நிலையம் சிங்கப்பூர் ஆரம்பிக்கப்பட்டது. நிலைய ஆசிரியர்களின் உழைப்பினாலும் பெற்றோர்களின் ஆதரவினாலும் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது இந்த துணைப்பாட நிலையம் .ஈசூன், சூ(ஜூ) ரோங்மேற்கு, தெம்பனிஸ்(ஸ்), சுவாசூகாங் ஆகிய நான்கு இடங்களில் இ துணைப்பாட நிலையம் செயலாற்றி வருகிறது. பாலர் பள்ளி […]

சிங்கப்பூர் தேசியநாள் விழா அணிவகுப்பில் சிறப்பிக்கப்பட்ட தமிழ்மொழி!

சிங்கப்பூரின் 51 ஆவது தேசிய நாள்விழா இன்று (09 – 08 – 2016) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட அணிவகுப்பில் தமிழ்மொழிக்கு சிறப்பிடம் தரப்பட்டு சிறப்பிக்கப்பட்டது தமிழ் மக்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மிதவை ” ஆம் ஆண்டு தேசிய நாள் விழாவில் போர்ப்படையினர் உருவாக்கிய தமிழ்ச்சொல் .2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் போர் படையினர் ஒன்றிணைந்து வெற்றி என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கினர். உலகில் எங்கேயும் எந்த போர் படையினராலும் தமிழில் இதுவரை […]

இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் – பகுதி : ஐந்து

எத்து என்றால் உதை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. உதைத்தலுக்கும் எத்துதலுக்கும் என்ன வேறுபாடு? உதைத்தல் என்பது காலை மடக்கி, பின்பக்கம் தூக்கி பாதத்தால் விசையுடன் தாக்குதல். இதைப் பின் பக்கமாகவும் செய்யலாம்.பால் கறக்கும் போது சில பசு மாடுகள் எவ்வாறு உதைக்கும். எத்துதல் என்பது காலை பின் பக்கம் இழுத்து காலின் முன் பகுதி அல்லது கால் கட்டைவிரலை ஒட்டிய பக்கவாட்டுப் பகுதியில் விசையுடன் தாக்குதல். கால்பந்து விளையாட்டின் போது பந்தை […]

2000 ஆண்டு பழமையான தானிய சேமிப்புக்கிடங்கு கண்டுப்பிடிப்பு !

விழுப்புரம் மாவட்டம், குறும்பன் கோட்டையில், 2,000 ஆண்டுகள் பழமையான தானிய சேமிப்பு கிடங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ளது, குறும்பன் கோட்டை. குறும்பர் என்ற பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் இந்த ஊரில், ஏனாத்தூர் சிறி சரஸ்வதி, விஸ்வ மகாவித்யாலயா கல்லூரியின், சமசுகிருதம் மற்றும் இந்திய கலாசாரத்துறை பேராசிரியரும், புவி தொல்லியல் ஆய்வாளருமான, எஸ்.ராமகிருஷ்ண பிசிபதி, அகழாய்வு பணியை மேற்கொண்டார். மே, 26 ல் தொடங்கி, ஜூன் 20 […]

உலகின் முதல் தமிழ் அஞ்சல்தலை : சிங்கையும் தமிழும்

உலக நாடுகளில் தமிழின் பெருமையும், மேன்மையும் பெரும் பங்களிப்புடன் செய்யும் சிங்கப்பூர் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தனது 51 ஆம் தேசிய நாளை கொண்டாடுகிறது. சிங்கப்பூர் தமிழில் முதல் முறையாக அஞ்சல் தலை வெளியிட்ட நாடாக கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு சிங்கப்பூர் 25 ஆம் ஆண்டு தேசிய நாளை முன்னிட்டு முதல் தமிழ் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது நித்திஷ் செந்தூர் இந்தியாவில் 1960 ம் ஆண்டு திருவள்ளுவரும், 1968 இல் தமிழ் கருத்தரங்கமும் அஞ்சல்தலையில் […]

இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: நான்கு

பைய என்ற சொல்லுக்கு மெதுவாக, மெல்ல என்பது பொருள். ஆனால் இது பையப் பைய மறைந்து கொண்டு வருகிறது. பையப்பைய என்பது இரட்டைக்கிளவியாகவும் வழக்கில் இருக்கும் ஒரு சொல்லாகும். ஆனால், இது இதே பொருளில் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. பையப்பைய என்பது அன்றைக்குப் பைபய என்று வழங்கப்பட்டது.மிக்க ஒளிராது,முணுமுணு என்று எரியும் ஒரு விளக்கு விடியற்காலத்து வெள்ளியே மீனைப் போல மெல்ல மெல்ல எரிந்து கொண்டிருக்கும் அழகை கூற வந்த ஒரு […]

சிங்கப்பூரில் தமிழ் மொழி மாதம் : சிங்கையும் தமிழும்

2007ஆம் ஆண்டு தமிழ் மொழி வாரம் முதன் முதலில் சிங்கப்பூரில் வளர்தமிழ் இயக்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் தமிழை வாழும் மொழியாக திகழ வேண்டும் என்பது தான் வளர் தமிழ் இயக்கத்தின் குறிக்கோளாக இருந்தது. ஒருவார தமிழ் கொண்டாட்டமாக ஆரம்பித்த இவ்விழா தற்போது ஒரு மாத கொண்டாட்டமாக மலர்ந்துள்ளது. ஒன்பது ஆண்டுகள் மக்களின் பேராதரவை தமிழ் மொழி விழா பெற்றுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் வரை எல்லா தரப்பட்ட தமிழர்களுக்குத் தமிழ்மணம் ததும்பும் நிகழ்ச்சிகள் […]

மண் வாசனை : தெக்கத்திச் சொலவடைகள்

இந்தத் தொடரில் நெல்லை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள சொலவடைகள் மட்டும், நெல்லை வட்டார வழக்கு மொழி நடையில் தொகுத்து தர உள்ளேன். நமக்கு இது வரையில் பழமொழிகள் என்ற பெயரில் கிடைத்திருப்பது எல்லாம் பண்டித தமிழில் தொகுக்கப்பட்டவை களாக உள்ளன. பழமொழி தொகுப்பு நூல்களில் பழமொழி அல்லது பல வாக்கியங்கள் பழமொழி என்ற போர்வையில் பதிவாகியுள்ளன. வடமொழிச் சொற்கள், செந்தமிழ் சொற்களும், கொடுந்தமிழ் சொற்களும் விரவிய பல பழமொழிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டுகின்றன. பழமொழிகள் என்பதும் […]

இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: மூன்று

நமது புகைவண்டி நிலையங்களில் சுமைதூக்குவோர் ஒரு பெட்டியைத் தலையில் வைப்பதற்கு முன்னர், இப்படி அவர்கள் தலையில் அழுத்தாத வண்ணம், உங்கள் மேல் துண்டை வட்டமாகச் சுருட்டி தலையில் வைத்து அதன்மேல் பொருட்களை வைப்பதை பார்த்திருக்கிறோம்.வீதிகளில் காய்கறிக் கூடையைத் தலையில் சுமந்து கொண்டு விட்டு ஒருவர் கூட இவ்வாறு வருவது பார்த்திருக்கலாம். இதுவே சும்மாடு ஆகும்.கிராமப்புற பெண்களானாலும், தம் முதுகில் நீளமாகத் தொங்கும் முந்தானையின் நுனிப்பகுதியை இவ்வாறு சுருட்டிச் சும்மாடு வைத்துக் கொள்வர்.இதனைச் சும்மாடு கட்டுதல் என்பர். இந்த […]

தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்து போன அலங்கு நாய்

தஞ்சை பெரிய கோவிலின் உள் திருச்சுற்றில் கண்ணைக்கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்கள் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சி பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது. உலகப்புகழ் பெற்ற விலங்கியலாளர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது, இப்படம் அலங்கு நாய் தான் என்பது உறுதியாகிறது. கோயில் உள் திருச்சுற்றில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் […]