பாதாள கரண்டி

இது ஏதோ சமையல்கட்டில் பயன்படுத்தும் கரண்டி வகை என்று நினைக்கிறீர்கள். அப்படி தானே. அது தான் இல்லை. இது வேறு சமாச்சாரம். பல்வேறு சைசில் ஏறக்குறைய பத்து பதினைந்து கொக்கிகள் இணைக்கப் பட்ட ஒரு வித்தியாசமான கருவி தான் பாதாளக கரண்டி. கிணற்றில் எதாவது விழுந்து விட்டால் அதை தேடி எடுக்க பயன்படும் கருவி இது. இதில் உள்ள வளையத்தில் கயிறு கட்டிக் கிணற்றுகுள்ளே விட்டுத் துழாவணும். பாதாள கரண்டியில் வாளின்னா சீக்கிரம் மாட்டிக் கொள்ளும். குடம் […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 1

மொரீசியஸ் தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. ‘மொரீசியஸ்’ என்ற பெயர் மொரீசியஸ் தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்ஸ், அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்ஸ், மொரீசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியஸின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. […]

கமுதி அருகே பேரையூரில் கீழடி போன்ற பழைமையான தொல்லியல் களம் : ஆய்வு நடத்த கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். கமுதி பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, பொறியாளர் த.சங்கர் ஆகியோர் தங்கள் ஊரில் திடல்காடு, செம்மண்காடு, செங்கமடைராஜா கோயில், கலுங்கு முனியப்பசாமி கோயில் ஆகிய பகுதிகளில் கள மேற்பரப்பாய்வு மூலம் பழங்காலப் பொருள்களைக் கண்டெடுத்து, அதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் […]

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடைமைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடைய சாதியம், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபட்டுள்ளது. […]

2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.

முசிறி – அலெக்ஸாண்ட்ரியா வணிக ஒப்பந்தத்தை மெய்ப்பிக்கும் 2100 ஆண்டுகள்பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு. கோவை மாவட்டம் வெள்ளலூரில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்றுஆய்வு மையத்தை சேர்ந்த தூரன்சுவேலுச்சாமி, புலவர் கணேசன் ,க.பொன்னுச்சாமி , செ.ரா.ரவிச்சந்திரன், சு.சதாசிவம் , ச.ரஞ்சித் மற்றும்பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் நடத்திய மேற்ப்பரப்பு ஆய்வில் 2100ஆண்டுகள் பழைமையான ரோமன் காசு ஒன்றும் , 1700ஆண்டுகள் பழைமையான ரோமன்காசுகள்ஐந்தும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதைப்பற்றி ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது, கொங்கு நாடு […]

பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

நாயக்கர் காலமான பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பியர், கிறித்தவ சமயத் தொண்டு செய்வதற்குத் தமிழகம் வந்தனர். இவர்களுள் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப் ஐயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் வீரமாமுனிவர் தமிழ் அகராதி அமைப்புக்கு வித்திட்டவர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கணம் வகுத்தவர்; அவற்றோடு தமிழில் சிறந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமை அவரையே சாரும். மெய்யெழுத்துப் போலவே எ, ஒ என்னும் குறில் எழுத்துகள் இரண்டும் புள்ளி பெறும் என எழுத்து வரிவடிங்களைப் பற்றி இலக்கண நூல்களான தொல்காப்பியமும் நன்னூலும் […]

செப்புப்பட்டயம் செப்பும் செய்தி

ஆண்டு : 1799, மாதம்: அக்டோபர், தேதி : 16, இடம்: கயத்தாறு. கயத்தாறு- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத ஊர். இந்த ஊர் சாலையோர புளிய மரத்திற்கு பேசும் சக்தி இருந்தால், கண்ணீர் மல்கச் சோகமான ஒரு கதையைச் சொல்லி அழும்.ஒரு பொய்யான, கண்துடைப்பான விசாரணை நடத்தி பாஞ்சாலங் குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை, கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ மேஜர் ஜான் அலெக்சாண்டர் பானர்மேன் என்ற அதிகாரி துாக்கிலிடக் கட்டளையிட்டார்.நெல்லைச் சீமையில் உள்ள மற்ற […]

பான்-கோ முதல் ஜின்பிங் வரை… தமிழர் சீன வரலாறு!

பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன.தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான உறவென்பது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே சீனர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. “கி.மு 100-ம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் […]

திருவாடானை அருகே வயல் வரப்பில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல் வரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரின் வயல் பகுதியில் மிகப்பெரிய கல்சிலை இருப்பதாக தினத்தந்தி தொண்டி செய்தியாளர் திரு மணிமாறன் அவர்கள் கொடுத்த  தகவலின் அடிப்படையில், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு அப்பகுதியில் ஆய்வு செய்து, அது கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் புத்தர் […]