மக்கள் செலுத்திய வரியை கோயில்களுக்கு வழங்கிய பாண்டிய மன்னன்

சாயல்குடி : சாயல்குடி பகுதி மக்கள் அரசுக்கு செலுத்திய வரியை சிவன் கோயில்களுக்கு பாண்டிய மன்னன் தானமாக வழங்கிய தகவல் தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் அருகே பால்கரையைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி, எம்.ஏ. தமிழ் படித்து வருகிறார். தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவின் வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் சாயல்குடி அருகிலுள்ள மேலச்செல்வனூரில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் கோகிலா, மனோஜ், டோனிகா, பிரவினா ஆகியோருடன் […]

தமிழில்‌ பேச அடித்தளம்‌ அமைத்திடுவோம்‌

1) அனைவரும்‌ தொலைபேசியில்‌ பேசுகிறீர்கள்‌. வணக்கம்‌, அய்யா வணக்கம்‌, என்று உங்கள்‌ பேச்சைத்‌ தொடங்க முயற்சி செய்யுங்களேன்‌. (ஹலோ வேண்டாம்‌. எலேய்‌, எல்லோ என்பது தான்‌ ஹலோ என்றானது எனவே அலோ என்று சொல்லுவது தவறில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்‌ கொள்ளாதீர்கள்‌) 2) கண்ணாடி முன்‌ நின்று பேசுங்கள்‌. உங்கள்‌ முகம்‌ எப்படி இருக்கிறது என்று பாருங்கள்‌.ஒவ்வொரு ஒலிப்பின்‌ பொழுதும்‌ உங்கள்‌ முகம்‌ மாறுகிறதா அல்லது அப்படியே சிலைபோலவே இருக்கிறதா என்று பாருங்கள்‌. உங்கள்‌ முகம்‌ […]

திருவாதவூர் ஓவா மலை…

திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப்  பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய  இருவரும் பிறந்த ஊர். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால்  அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில்  இம்மலை உள்ளது.

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் என இம் முப்பது இடங்களில் காணப்படுகின்றன. ஆனைமலை கல்வெட்டில் ‘அரட்ட’ என்ற சொல்லில் ‘ ட்’ என்ற மெய எழுத்துக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரச்சலூர்க் கல்வெட்டில் எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் எகரக் குறிலுக்கு புள்ளி […]

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான கோனமுட்டான் கொல்லை என்ற மாந்தோப்பில் 500 ஆண்டு பழமையான அரிய வகை நடுகற்களை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஷ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்களான பாலாஜி, மஞ்சுநாத், கார்த்திக், செல்வமணி மற்றும் திம்மராஜ் ஆகியோர் கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது: 6 ஆண்டுக்கு மேலாக கிருஷ்ணகிரி […]

தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன். இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு […]