சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2
சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரிவடிவங்களாக கருதப்பெற்றது. ஒரு மொழிக்கு இருவேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர் மக்களிடையே குழப்பத்தை […]