சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள். வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. பொருள் நிறைந்ததாய் மாற்றுகின்றன. பொருள் என்றவுடன் வாழ்வதற்குப் பொருள் வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்று படித்தவாசகம் ஒன்று நினைவுக்குளத்தில் நீச்சலடிக்கின்றது ஆம், வாழ்க்கை பொருளால் ஆனது. பொருள் நிறைந்தது. மனிதன் இனக்குழு சமூகமாக வாழ்ந்த போது தன்னிடமுள்ள பொருளைக் […]