சிங்கையில் தமிழ் மொழி

தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களே. அதுமட்டுமின்றி தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பும் சிங்கப்பூரில் உண்டு. இது நமக்கு கிடைத்துள்ள மிக பெருமையான விஷயமாகும். தமிழ் வானொலியான ஒலி 96.8, தமிழ் நாளிதழான தமிழ் முரசு மற்றும் தமிழ் ஒளிவழியான வசந்தம் ஆகியவை சிங்கப்பூரில் உள்ள முக்கியமான ஊடகங்களாகும். தமிழ் சிங்கப்பூரில் நிலைத்து இருப்பதற்கு இவை மிகவும் துணை நிற்கின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முறைகளும் சிங்கப்பூரில் பல பரிமாணங்களைக் […]

சிங்கப்பூர் தமிழ் சிற்றிதழ்கள் : சிங்கையில் தமிழ் IV

இளையர்களிடையே எழுத்து ஆற்றலை வளர்க்க சிற்றிதழ்கள் பெரிதும் துணை நிற்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு போட்டிகளும் இதில் நடந்தப்படுகின்றன. இளம் உள்ளூர் எழுத்தாளர்கள் கண்டறிய இது பெரிதும் உதவும். தமிழ் அமுதம் 2) செம்மொழி.; 3) பொழில் 4)வாதினி 5) சுட்டிமயில் (சிங்கை பதிப்பு) 6) தமிழ்மணி இது மட்டுமின்றி உள்ளூர் தமிழ்மின்னிதழ்களும் உள்ளன.இளமை தமிழ் இணையம் :சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 மற்றும் வசந்தம் ஒளிவழி சிங்கை ஒலி 96.8 வானொலிநிலையம் 24 மணிநேரம் தமிழ் ஒலிபரப்பைச் […]

தமிழுக்காக குவிந்த இளைஞர்கள் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர்மாநாடு 2016

கடந்த வாரம் (23, 24 ஆகிய தேதிகளில்) உலகமே படுவிரைவாக இயங்கிக் கொண்டிருந்தபோது, ஓசையின்றி ஒரு மிகச் சிறந்த நிகழ்வு சிங்கையில் நடைப்பெற்றது. பல இளைஞர்கள் கூடி,மிகச்சிறப்பாக நடைபெற்ற சிங்கப்பூர்த்தமிழ் இளையர் மாநாடு 2016 தான் அது. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மாணவர்கள் கடுமையாக உழைத்து இந்நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 150 இளையர்கள் இதில் கலந்துக் கொண்டனர் இன்றைய இளையர்களின் கையச்சு; நாளைய தலைவர்களின் பாதச்சுவடு எனும் கருப்பொருளைத். தாங்கி மலர்ந்தது […]