பழந்தமிழர் கடல் வணிகம் – 4

சங்க இலக்கியத்தில் வணிகம்: பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியத்தில் வணிகம் குறித்தும், கடல் வணிகம் குறித்தும் சொல்லப்பட்ட தரவுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆதலால் சங்க இலக்கியத்தில் வணிகம், கடல்வணிகம் முதலியன குறித்துப் பேசப்பட்ட விடயங்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புகார் வணிகர்கள்:   நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர்   வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி   கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது   . . . . . . . . […]

பழந்தமிழர் கடல் வணிகம் – 2

பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 25

ஆரம் என்பது சந்தனப் பூ. இதனைத்,  ‘திண்காழ் ஆரம்’, ‘ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த’, ‘ஆரம் நாறும் மார்பினை’, ‘ஆரம் நாறும் மார்பினன்’, ‘நறுங் காழ்ஆரமொடு மிடைந்த மார்பில்’, ‘மலைச்செஞ்சாந்தின் ஆர மார்பினன்’ என்றும், சங்க கால மக்கள் சந்தனத்தை மார்பில் பூசிக்கொண்டதை (மதுரைக்காஞ்சி, வரி 715; அகநானூறு, 22:12; குறுந்தொகை, 198:7 மற்றும் 161:6; நற்றிணை, 314:4; குறுந்தொகை, 321:1) போன்ற இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகிறது. சந்தனம் மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு நறுமணப் பொருளாகும். இம்மரம் காடுகளிலும், நாட்டின் பல பாகங்களிலும் வளரும். […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24

சிந்துவாரம் கருநொச்சிப்பூ என நச்சினார்க்கினியர் அழைக்கும் இத்தாவரம் பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு தவிர வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. “நந்தி வட்டமும் நாகத்து அலரும் சிந்துவாரமுஞ் சேபாலிகையும்” என்று பெருங்கதையில் (2, இலாவண காண்டம், 15, விரிசிகை மாலைசூட்டு : 103-104) இத்தாவரம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தும்பை தும்பையானது, தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மஞ்சள் தும்பை என பலவகைப்படும். வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23

பகன்றை மருத நிலத்திற்குரிய இக்கொடியைச் ‘சிவதை’ என்று நச்சினார்க்கினியரும்,.  பெருங்கையால் என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 155-160 உரை) கூறுவர்.  இக்கொடி அகன்ற இலைகளைக் கொண்டது. தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை; முறுக்கிய ஆடையை ஒத்து விளங்கும். பகன்றை மலர் வயலிலும், சேற்றிலும், பசுமையான புதரிலும் மலரும் என இலக்கியங்கள் கூறுகின்றன (ஐங்குறுநூறு, […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22

கொன்றை கொன்றைப்பூக்கள் மிகமிக அழகானவை. சரம் சரமாக ஒள்ளிய மஞ்சள் நிறத்தில் மாலைகள் தொங்கினாற் போன்று பூத்துக் குலுங்கிக் கண்களைக் கவர்ந்தீர்க்கும். கொன்றைமரம் பூத்துக் குலுங்கும்போதும், மரமெல்லாம் கொழுந்துகளாக அரும்பியிருக்கும் காலத்திலும் பார்ப்பதற்கு மிகக் கவர்ச்சியாக இருக்கும். இக்காலத்தில் காணப்படும் கொன்றையில் இரண்டு மூன்று இனங்களில் மஞ்சள் பூவுடையதே சங்கப் பாடல்களில் கூறப்பட்ட கொன்றையாகும். பிற கொன்றைகள் வெளிநாட்டிலிருந்து கொணரப்பட்டு இங்கு வளர்வன. கொன்றை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. இதன் […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 21

தணக்கம் இதைக் கபிலர், ‘பல்பூந் தணக்கம்’ (பல பூக்களையுடைய தணக்கம்) எனக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர, வேறு இலக்கியங்களில் தணக்கம்பற்றிய செய்தி காணப்படவில்லை. பெருங்கதையில்,  “தண்பூந் தணக்கந் தமாலந் தகரம்” (பெருங்கதை, இலாவண காண்டம், 15 விரிசிகை மாலைசூட்டு : 15)  தணக்கம் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. ஈங்கை சங்க இலக்கியங்களில் இது கொடி என்று கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர், இதனை ‘இண்டம் பூ’  என்பர்.  ஈங்கைக் கொடி பனிக்காலத்தில் செழித்து வளர்ந்து பூத்து நிற்கும். “வெண்கொடி ஈங்கைப் பைம்புதல் அணியும் அரும்பனி அளைஇய […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20

வழை இப்பூவைத் தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ [கொங்கு முதிர் நறு வழை]  எனக் குறிஞ்சிப்பாட்டும், பொய்கைக் கரைகளில் வளர்ந்திருக்கும், மணம் நிறைந்த இதனைக் ‘கரையன சுரபுன்னை’ என்று பரிபாடல் (11:17)பாடுகிறது. பண்டை மக்கள் இதனைக் கண்ணியாகக் கட்டி அலங்கரித்துக் கொண்டனர் என்பதை, ‘வழைப் பூங்கண்ணி’ என்று வரும் புறப்பாடல் வரியால் (131:2) அறிகிறோம். நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் (அகநானூறு, 8); கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து சுரபுன்னை வளரும். குமணன் ஆண்ட முதிரமலையிலும், வளர்ந்திருந்தது (புறநானூறு, 158:21-22), தொண்டைநாட்டு […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 19

சிறுசெங்குரலி சிறு செங்குரலி என்று கபிலரும், கொங்குவேளிரும் பாடிய இதனைக் கருந்தாமக்கொடி என்றும் கூறுவர். குரலி சிறிய கொத்தான பூக்கள் கொண்டது. மருத நிலத்தது; செம்மை நிறப் பூ;  நீர்க்கொடி என்று குறிப்பிடுகின்றார் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. (தமிழரும் தாவரமும்,  ப. 100). ஒளி பொருந்திய செங்குரலிக் கொடியை உடைய நீர் நிலை என்பதை, “ஒண்செங்குரலித் தண் கயம் கலங்கி’ என்று புறப்பாடல் (283 : 1) குறிக்கிறது. கோடல் செங்காந்தள், கோடல் ஆகிய காந்தளின் இரண்டு வகைகள் தமிழிலக்கியத்தில் பலவிடங்களில் கூறப்பட்டுள்ளன. […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 18

ஞாழல் தமிழ்க் கவிஞர்கள் பலரால் பாடப்பெற்று, இலக்கியச் சோலைக்கு எழிலூட்டிய பல மலர்களுள் ஞாழலும் ஒன்றாகும். ஞாழல்மரம் இக்காலத்தில் புலிநகக் கொன்றை  (Tiger claw tree) என்னும் பெயர்கொண்டு விளங்குகிறது.       இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகுபோல் இருக்கும். (குறுந்தொகை, 50:1) ஞாழல் ‘ஸ்டெர்கூலியேசீ’ (Sterculiaceae) எனும் கோக்கோமர வகுப்பைச் சேர்ந்தது. வளரிடம் நெய்தலுக்குரிய சிறந்தமரங்களுள் ஒன்று ஞாழல்                “ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்,                  கொழுநிழல் ஞாழல்” என்று கலித்தொகை (56:1-2) […]