TAMIL LANGUAGE & LITERATURE – Tholthamizh – Ma. So. Victor

தமிழ் மொழியை ஆய்வு செய்வோர், அதற்கான தரவுகளை பல்வேறு தளங்களிலும் தேடவேண்டியுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் தமிழ் விளங்குகின்றது என்ற கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகம் வந்த ஐரோப்பியர்கள்தாம், தமிழைக் கற்று தமிழின் சிறப்பைத் தமிழருக்கே உணர்த்தினர். தமிழர்கள், உலகின் மேற்குத் திசையை நோக்க, ஐரோப்பியர்களே, அவ்வாயிலைத் திறந்து விட்டனர். அதுவரையில் தமிழ் மொழியை மட்டுமே அறிந்திருந்த தமிழர், மேலை மொழிகளையும் கற்கத் தொடங்கினர். வீரமாமுனிவர், கால்டுவெல் கங்காணியார், […]

13ம் நுாற்றாண்டை சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுப்பு

ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதி கரை பகுதியில் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட ஐந்து பஞ்சபூத சிவன் கோயில்கள் உட்பட மொத்தம் 21 சிவன் கோயில்கள் உள்ளன.ஆத்தூரை சேர்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் நதிக்கரைப் பகுதியில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தேவியாகுறிச்சி கிராமத்தில் […]

புதுகை கடலோரப்‌ பசு பகுதி சிவன்‌ ஆலயத்தில்‌ 10-ம்‌ நூற்றாண்டு புத்தர்‌ சிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, நவ. 22: புதுக்‌கோட்டை – ராமநாதபுரம்‌ எல்லையில்‌ கடற்கரையில்‌ அமைந்துள்ள சுந்தரபாண்‌டியன்‌ பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்‌- காமாட்சியம்மன்‌ கோயிலில்‌. 10-ம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த புத்தர்‌ சிலை. கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப்‌பட்டினங்களின்‌ கடல்‌ வாணிப வரலாறு: குறித்து ஆய்வுசெய்துவரும்‌ புதுக்‌கோட்டை அரசு அருங்காட்சியகக்‌ காப்‌பாட்சியர்‌ முனைவர்‌ ஜெ. ராஜாமுகமது புதன்கிழமை களப்பணி மேற்கொண்டபோது இந்தச்‌ சிலையைக்‌ கண்டெடுத்‌துள்ளார்‌. இதுகுறித்து அவர்‌ தெரிவித்தாவது: இப்பகுதியில்‌ பொன்பேத்தி என்னும்‌ ஊரில்‌ மட்டும்‌ புத்தமத .சின்னங்கள்‌ காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்‌கள்‌ […]

வரலாற்றுக் காலம் – 1. கொடுமணலும் மரக்காணமும்

தமிழக அகழாய்வுகள் காட்டும் வரலாற்றுக் கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை பெருங் கற்படைக் காலத்தின் இறுதிக்காலமும், சங்க காலத்தின் ஆரம்பமும், தமிழக வரலாற்றின் துவக்க காலம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இக்காலத்தில்தான், கீறல் குறியீடுகளின் தொடர்ச்சியாக, எழுத்துகள் பயன்பாட்டில் வந்தன. எழுத்துகளும் குறியீடுகளும் கலந்து வழக்கில் இருந்தன. மட்கலன்களிலும் சமணப்படுக்கைகளிலும் ஒரு சொல், சில சொற்கள், ஒரு வரி, சில வரி என தமிழ் பிராமி எழுத்துகள் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன. […]

பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

தமிழில்‌ பேச அடித்தளம்‌ அமைத்திடுவோம்‌

1) அனைவரும்‌ தொலைபேசியில்‌ பேசுகிறீர்கள்‌. வணக்கம்‌, அய்யா வணக்கம்‌, என்று உங்கள்‌ பேச்சைத்‌ தொடங்க முயற்சி செய்யுங்களேன்‌. (ஹலோ வேண்டாம்‌. எலேய்‌, எல்லோ என்பது தான்‌ ஹலோ என்றானது எனவே அலோ என்று சொல்லுவது தவறில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்‌ கொள்ளாதீர்கள்‌) 2) கண்ணாடி முன்‌ நின்று பேசுங்கள்‌. உங்கள்‌ முகம்‌ எப்படி இருக்கிறது என்று பாருங்கள்‌.ஒவ்வொரு ஒலிப்பின்‌ பொழுதும்‌ உங்கள்‌ முகம்‌ மாறுகிறதா அல்லது அப்படியே சிலைபோலவே இருக்கிறதா என்று பாருங்கள்‌. உங்கள்‌ முகம்‌ […]

திருக்குறளும் அரிய தகவல்களும்

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812  * திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்  * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133  * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380  * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700  * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250  * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330  * திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000  * திருக்குறளில் […]

வரலாற்றுப் பெருமிதம் கொண்ட திருமயம் கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது, திருமயம் கோட்டை.  ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ல் இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலக்கியங்களும் கட்டடக்கலை நூல்களும் வரையறுத்த இலக்கணத்துடன் அமைந்தது இக்கோட்டை. கோட்டையைச் சுற்றி முன்னர் ஏழு சுற்று மதில்கள் இருந்தன. கோட்டை வட்ட வடிவில் அமைந்துள்ளது.  கோட்டையின் வெளிச் சுவற்றைச் சுற்றி முதலைகளும், நச்சுப் பாம்புகளும் நிறைந்த அகழி இருந்தது. தற்போது அகழி தூர்ந்து போய்விட்டபோதும், பல இடங்களில் அதற்கான அடையாளங்கள் […]