தமிழகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மீசை வைத்த புத்தர் சிலை!

புத்தமும், சமணமும் தமிழினத்தின் தொன்மையான மதங்களாக இருந்து வந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் இது குறித்த குறிப்புகள் நிறைய காணக்கிடைக்கின்றன. மேலும், பல சமணப்படுகைகள் தமிழகமெங்கும் காணக் கிடைக்கின்றன. பல புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இப்படி தமிழகத்தின் தொன்மையான புத்தம் மற்றும் சமணம் பற்றி ஆய்வு செய்த முனைவர்.சம்புலிங்கம் அவர்கள் மீசை வைத்த அரிய புத்தர் சிலையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிந்துள்ளமை என்னுடைய களப்பணியில் நான் கண்டுபிடித்த சிலைகள் மிகவும் ஆச்சரிய கூட்டுபவை. திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் மீசையுடன் இருந்த ஒரு புத்தர் சிலையை கண்டுபிடித்தேன்.இதுபோன்ற ஒரு புத்தர் சிலையைத் தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியவில்லை. புத்தர் சிலை களுக்குரிய எல்லாக் கூறுகளும் இருந்தன. கூடுதலாக மீசையும்! மன்னர் என்று குறிப்பதற்காகவோ, வீரத்தைக் குறிப்பதற்காகவோ, சிற்பி தனது ஆசைக்காக இதனை வைத்திருக்கலாம். முதலில் பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் இதனை நம்பவில்லை. நேரில் பார்த்த பின்னர் தான் ஏற்றுக் கொண்டார்கள். நாம் நினைப்பதை விட மகத்தான ஆச்சரியங்களைக் களமும் காலமும் ஒளித்து வைத்திருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது மீசை வைத்த புத்தர் சிலை .

மீசை வைத்த புத்தர் சிலை

திருச்சி மாவட்டம் மங்கலம் என்னும் ஊரில் அரிய மீசை வைத்த புத்தர் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சமணம்

தமிழர் வரலாறு

தமிழ் செய்திகள்

புத்தம்

புத்தர்

முனைவர் ஜம்புலிங்கம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *