மடகாசுகர் நாட்டில் ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) !

மடகாசுகர் நாட்டில் சவிகா என்ற பெயரில் தமிழ்நாட்டைப் போலவே சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் நடைபெறுகிறது.அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) என்றழைக்கப்படும் மடகாசுகரின் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் பெத்சிலியோ எனப்படும் சமூகமக்களால் இவ்விளையாட்டு தமிழகத்தைப் போலவே சிறிய கிராமங்களில் நிகழ்த்தப்படுகிறது. இவ்விளையாட்டில் மாடுகளை அடக்க விரும்பும் எந் தபெத் சிலியோ சமூகத்தை சேர்ந்த மனிதரும் மாடு பிடிக்கச் செல்லலாம். இப்பகுதிகளில் வேளாண்மையே முதன்மையான தொழிலாக உள்ளது.

நெல்வயல்களில் பயிரிடத் துவங்கும் காலத்தில் இவ்விளையாட்டு நடைபெறுகிறது.மேலும், இவ்விளையாட்டை வீரத்தின் அடையாளமாகவே மடகாசுகர் மக்கள் காண்கின்றனர்.அதேபோல், மலகாசி என்றழைக்கப்படும் மடகாசுகர்வாசிகள், பொன், பொருளை விட செபு எனப்படும் இம்மாடுகளை விலையுயர்ந்ததாக கருதுகின்றனர். ஏறுதழுவல் நிகழ்வு மலகாசி மொழியில் மிசாவிகா என்றால் பிடித்திருத்தல் ஒரு கையால் பிடித்தல் என்றும், அதைப் போலவே அவர்கள் மாடுகளின் திமிலை பிடிக்கின்றனர், ஒரு கையால் பிடிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது இவ்விளையாட்டு மனிதர்களுக்கும் செபு (Zebu) க்களுக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று இவ்விளையாட்டின் பயிற்றுனர் சகாமடிரா சொனா என்பவர் ஆப்பிரிக்க ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார். செபு (zebu).என்றழைக்கப்படும் இம்மாடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மை பொருட்களின் மூலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு அல்லது தென்திசை நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் ஓங்கோல், பிரம்மன், நெல்லூர், காங்கேயம் காளைகள் உட்பட 75 வகை காளைகள், செபுஇனத்தை சார்ந்தவை என்று கால்நடைகளுக்கான வழிகாட்டிநூல் கூறுகிறது. தமிழக கிராமங்களைப் போல சேவற்சண்டையும் இங்கு பரவலாக நடத்தப்படுகிறது.

காணொளிகள் :

தமிழகத்தைப் போல மடகாசுகர் நாட்டிலும் சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் நடைபெறுகிறது !

அயலக தமிழ்செய்திகள்

ஏறுதழுவல்

சல்லிக்கட்டு

மடகாசுகர்

தமிழகத்தைப் போலவே மடகாசுகர் நாட்டில் ஏறுதழுவல் எனப்படும் சல்லிக்கட்டு நடத்தப்படுகிறது !


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *