140 ஆண்டுகளாக கொரியாவை ஆட்சி செய்தது தமிழ் பெண் – ஒடிசா பாலு ஆச்சர்ய தகவல்

கொரியாவில் 140 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஆட்சி புரிந்துள்ளதாக கடல்சார் தமிழ்பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது தமிழர்களின் தொல்பழங்கால கற்காலம் என்பது 17 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது. தமிழர்களின் ஆமை வழி கடல்வணிக பயணத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தமிழ் தொன்மங்களை பரவ ஆரம்பித்தது. குறிப்பாக இந்தோ,பசுபிக்கடல் வழியே ஆப்ரிக்கா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சீனா, கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் தமிழர்களின் அடையாளங்கள் ஏராளம் உள்ளன.இதில், தமிழ் அரசர்கள் […]

கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்

மண்ணில் புதையுண்டு போன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப்பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன. கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்: மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை […]

தமிழர்களின் வைகை ஆற்று நாகரீகம் !

மனிதகுலத்தின் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில் தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவ நதிக்கரையில் தான் பெருநகரங்களும் நாகரிகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை. ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்று தான் வைகை. தமிழ்நாகரிகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் […]

இன்றைய திருப்பதியும், குமரி கண்டமும்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப்பாயிரம் பாடியபனம் பாரனார் தமிழகத்தின் நிலஎல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி தானா? தென்குமரி என்பது இன்றைய குமரி முனையா அல்லது கடல்கோளால் அழிந்து போன குமரிக்கண்டமா? முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப் பாடும் காரிக்கிழார் என்ற புலவர் தமிழ் ஆட்சிப் பரப்பை அது பனிபடு நெடுவரை வடக்கும்.தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரை பொருதொடு கடற்குணக்கும் குடா அது தொன்று முதிர் […]

பூம்புகார் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக்கடற்கரையை அலங்கரித்த பண்டைய வணிக நகரமாகும்.கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் மரக்காணம் என்ற பெயர் வந்தது என்பர். முதலாம் இராசராசன் காலத்தில், மனக்காணமான இராசராசப் பேரளம் என்று உப்பளங்களில் இருந்து வரும் வருவாய் கொண்டு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனக்காணம், பின்னர் மரக்காணமாக மறுவி இருக்கவும் வாய்ப்பு […]