வசவ சமுத்திரம் : கிழக்கு கடற்கரைசாலையில் தமிழரின் தொன்மையான வணிக நகரம்

அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாயத்தொட்டிகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதேபோன்ற அமைப்பில் தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு உறைகிணறுகள் காணப்பட்டன.

அவற்றில் ஒன்று 11 உறைகளையும், மற்றொன்று 5 உறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விட்டம், கீழே செல்லச் செல்லஅதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்து கிடைத்துள்ள தொல்பொருட்களில் ஒன்று, கைப்பிடியுடன் கூடிய ஆம் போராஜாடியின் ஒரு பகுதி ஆகும். உரோமானியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றை ஒப்பு நோக்கும்போது, இப்பகுதி சங்ககாலம் தொட்டே உரோமானியர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த சிறப்பான ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது. மேலும் இங்கு இன்னும் நுணுக்கமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்ட்டால், இதற்கு பல தெளிவான பதில் கிடைக்கும்.  நன்றி. 

திரு.ச. செல்வராஜ், (தொல்லியல் அறிஞர்) மற்றும் தொல்லியல் மணி – தினமணி

கடல் மேலாண்மை                        

செய்திகள்

தமிழர் பெருமை

தமிழர் வரலாறு

தொல்பொருள்

நாகரீகம்

பல்லவர்கள்

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

வசவசமுத்திரம்

வரலாறு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *