காற்றுக்கான பழந்தமிழ் பெயர்கள்

தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன தட்ப வெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக்கால அளவுக்கு வீசும் பலமானகாற்று “பாய்புயல்” எனப்படுகின்றது. நீண்டநேரத்துக்கு வீசும் பலமான காற்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. புயல், சூறாவளி போன்ற பெயர்கள் இவ்வாறான காற்றுக்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆகும். தமிழிலும் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்துவீசும் காற்றுகளுக்குத் தனித்தனியான பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது படம் அலெக்சாந்த்ரோஎர்னசுட்டோ படம் அலெக்சாந்த்ரோஎர்னசுட்டோ திசையினைப் பொருத்து காற்றின் பெயர்கள் தெற்கிலிருந்து வீசுவது “தென்றல் காற்று”,அல்லது சோழ வடக்கிலிருந்து வீசுவது “வாடைக் காற்று”,கிழக்கிலிருந்து வீசுவது “கொண்டல் காற்று” ,மேற்கிலிருந்து வீசுவது “மேலைக்காற்று” அல்லது கச்சான் (காற்று இந்த அடிப்படையில் தென்மேற்கில் இருந்து வீசும் காற்று “சோழகக்கச்சான்” என்றும், தென்கிழக்கில் இருந்து வீசும் காற்று “சோழகக் கொண்டல்” என்றும் பெயர் பெறுகின்றன. தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்றைத் “தென்றல்” என்பர்.

கட்டுரைகள்

தமிழ்செய்திகள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *